தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

திடீரென பற்றி எரிந்த கார்.. ஒற்றை ஆளாக தீயை அணைத்த போக்குவரத்து காவலர்! - CHENNAI CAR FIRE ACCIDENT - CHENNAI CAR FIRE ACCIDENT

🎬 Watch Now: Feature Video

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 20, 2024, 6:44 PM IST

சென்னை: ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்தவர் தேவராஜ். இவரது நண்பர் பிரபு. இருவரும் காரில் காசிமேடு சென்று விட்டு மீண்டும் ஸ்ரீபெரும்புதூர் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, டிரங்க் சாலையில் இருக்கும் பூந்தமல்லி பேருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென காரின் முன் பகுதியிலிருந்து புகை வந்ததுள்ளது. 

இதையடுத்து, காரில் இருந்து இருவரும் கீழே இறங்கிய நிலையில் இதைப் பார்த்த பூந்தமல்லி போக்குவரத்து காவலர் மற்றும் பொதுமக்கள் அருகில் இருக்கும் கடைகளிலிருந்த தீயணைப்புக் கருவி மூலம் காரில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால், தீ கட்டுக்குள் வரவில்லை. பின் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் முழுமையாக எரிந்த காரை அணைத்து அப்புறப்படுத்தினர். 

இந்நிலையில், தீயணைப்பு வீரர்கள் வருவதற்கு தாமதமானதால் கார் முற்றிலும் எரிந்து நாசமானதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். மேலும், இதனால் அந்த சாலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டதுடன், போக்குவரத்து வாகனங்களுக்கு வேறு வழி மாற்றப்பட்டது. இதனால் சாலையே சற்று நேரம் போக்குவரத்து நெரிசலால் ஸ்தம்பித்து போனது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details