ஜஸ் கட்டிகள் கொண்டு ஜெய் ஸ்ரீ ராம்.. தேனி பாஜக சார்பில் பொதுமக்களிடையே நூதன விழிப்புணர்வு! - ஐஸ் கட்டிகள் கொண்டு ஜெய் ஸ்ரீ ராம்
Published : Jan 21, 2024, 9:34 PM IST
|Updated : Jan 21, 2024, 10:59 PM IST
தேனி: உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியில் நாளை (ஜன.22) ராமர் கோயில் கும்பாபிஷேகம் நண்பகல் 12.20 மணி அளவில் நடைபெறவுள்ளது. அதனை முன்னிட்டு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாகத் தேனி பாஜக சார்பில் தேனி அருகே அரண்மனை புதூரில் உள்ள வேதபுரி ஆசிரமத்தின் முன்பு ஐஸ் கட்டிகளை செதுக்கி "ஜெய் ஸ்ரீ ராம்" (JAISHREERAM) என்ற 11 எழுத்துக்கள் அடங்கிய வாசகங்களை உருவாக்கி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
2024 கிலோ கொண்ட ஐஸ் கட்டிகளை இரண்டு மணி நேரமாக செதுக்கி ஜெய் ஸ்ரீ ராம் என்று எழுத்து வடிவில் வாசகத்தை உருவாக்கி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதனைத் தொடர்ந்து ஐஸ் கட்டிகளில் ஜெய்ஸ்ரீராம் என்று உருவாக்கப்பட்டதைப் பொதுமக்கள் அதன் முன் நின்று செல்பி எடுத்தும் சென்றனர். அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு தேனியில் 2024 கிலோ ஐஸ் கட்டிகளை வைத்து "ஜெய் ஸ்ரீ ராம்" (JAISHREERAM) என்று எழுத்து வடிவில் உருக்கி பொதுமக்களிடம் நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.