தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

காவல் நிலையத்தில் நடைபெற்ற வளைகாப்பு.. பெண் காவலர்களை நெகிழ வைத்த காவல் உறவுகள்! - baby shower function - BABY SHOWER FUNCTION

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 21, 2024, 3:10 PM IST

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அனைத்து மகளிர் காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு பணிபுரியும் சார்பு ஆய்வாளர் கௌசல்யா மற்றும் பெண் காவலர் பிரியா மேரி ஆகிய இரு காவலர்களும் கர்ப்பமாக உள்ளனர். இந்நிலையில், அவர்கள் இருவருக்கும் அந்த காவல் நிலையத்தில் பணிபுரியும் சக காவலர்கள் சார்பில் காவல் நிலையத்திலேயே இன்று (ஞாயிற்றுக்கிழமை) வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. 

இரு காவலர்களுக்கும் பழங்கள் மற்றும் சீர்வரிசை வைத்து, வளையல் அணிவித்து, 5 வகையான சாப்பாடு செய்து வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பழனி டிஎஸ்பி தனஜெயன் தலைமையில், மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் செல்வியின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த வளைகாப்பு நிகழ்ச்சியில், நகர காவல் ஆய்வாளர் மணிமாறன், போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் மகேந்திரன் உள்ளிட்ட சக காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு கர்ப்பிணிகளை வாழ்த்தினர். 

இந்நிலையில், கர்ப்பமாக உள்ள பெண் காவலர்களுக்கு, உடன் பணிபுரியும் சக காவல் துறையினர் சார்பில் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது‌ நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

ABOUT THE AUTHOR

...view details