தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

க்யூட்டாக தூங்கும் குட்டி யானை…. பாதுகாப்புக்கு தாய் யானை - வைரல் வீடியோ! - வால்பாறை யானை

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 3, 2024, 10:54 PM IST

கோயம்புத்தூர்: கோவை மாவட்டம் வால்பாறை அடுத்த சிறுகுன்றா பகுதியில் தேயிலை தோட்டத்தின் அருகாமையில் தன்னுடைய குட்டியை சுகமாக தூங்க வைத்து பாதுகாப்புக்கு அருகிலேயே தாய் யானை இருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

ஆனைமலை புலிகள் காப்பக வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் யானைகளின் புகழிடமாக வால்பாறை காணப்படுகிறது. இந்நிலையில் இன்று சிறுகுன்றா பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டதால் அங்குள்ள யானைகள் ஓடையில் ஓடும் தண்ணீரை எடுத்து மேலே ஊற்றி தங்களை குளிர்ச்சி படுத்தி கொண்டனர்.

அப்போது, அங்கு தாய் யானையின் நிழலில் குட்டி யானை ஒன்று ஆழ்ந்து கொண்டிருந்தது. சுகமாக தூங்கும் குட்டி யானையை அருகாமையிலேயே நின்று தாய் யானை பாதுகாத்தது சுற்றுலா பயணிகளை நெகிழ்ச்சி அடையவைத்தது.

குட்டி யானை தூங்கி எழுந்ததும், தாய் யானை குட்டி யானையை அழைத்து கொண்டு கிளம்பியது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. வால்பாறை பகுதியில் அதிக அளவில் யானைகள் நடமாட்டம் உள்ளதால் வால்பாறை பகுதியில் சுற்றி திரியும் யானைகளை காட்டுப் பகுதிக்கு விரட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details