தேர்தல் பிரச்சாரத்தில் ஜமாப் அடித்து அசத்திய அண்ணாமலை வீடியோ! - lok sabha election 2024 - LOK SABHA ELECTION 2024
Published : Apr 5, 2024, 1:12 PM IST
கோயம்புத்தூர்: நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரம் களைகட்டி வருகிறது. இந்த நிலையில், கோவை மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் கோவை வேட்பாளரும், பாஜக மாநில தலைவருமாக கே.அண்ணாமலை சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். கோவையில் கடந்த 3 நாட்களாகப் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை, நேற்று முன்தினம் கவுண்டம்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அண்ணாமலை நஞ்சுண்டாபுரம் பகுதியில் வந்து கொண்டிருந்த போது, இளைஞர்கள் ஜமாத் அடித்து உற்சாகமாக வரவேற்றனர். அப்போது, பிரச்சார வாகனத்திலிருந்து இறங்கிய அண்ணாமலை ஜமாப் அடிக்கும் இடத்தை நோக்கி வந்து, இளைஞரிடம் இருந்த ஜமாப்பை வாங்கி அடிக்கத் துவங்கினார். இளைஞர்களுடன் இணைந்து அண்ணாமலை உற்சாகமாக ஜமாப் அடித்து மகிழ்வித்தார். இதனால், அங்கிருந்த அனைவரும் உற்சாக முழக்கமிட்டனர். தற்போது, அண்ணாமலை ஜமாப் அடிக்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதேபோல, வெள்ளக்கிணறு பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட போது, கொங்கு மண்டலத்தின் பாரம்பரிய நடனமான வள்ளி கும்மி நடனம் ஆடி மக்கள் வரவேற்பு அளித்தனர். அப்போது, அண்ணாமலையும் வேனிலிருந்து இறங்கி பொதுமக்களுடன் சேர்ந்து வள்ளி கும்மி நடனம் ஆடினார். தீவிர பிரச்சாரத்திற்கு மத்தியிலும், அவ்வப்போது அண்ணாமலை இது போன்று செய்யும் செயல் மக்களைக் கவர்வதாகவும், தொண்டர்களுக்கு உற்சாகம் அளிப்பதாகவும் பார்க்கப்படுகிறது.