அதிமுக - திமுக உறுப்பினர்களிடையே கடும் வாக்கவாதம்.. காதை பொத்திக் கொண்ட நகர மன்றத் தலைவர்!
Published : 6 hours ago
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் நகர மன்றk கூட்டம் நகராட்சி வளாகத்தில் நகர மன்றத் தலைவர் லட்சுமி பாரி தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் திமுக அதிமுக உள்ளிட்ட நகர மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்கள் பகுதிகளில் உள்ள பிரச்னைகள் குறித்து பேசினர்.
அதில் அதிமுக 24வது வார்டு உறுப்பினர் நரசிம்மன் பேசுகையில், “நகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளுக்கும் தொகுதி மேம்பாட்டு நிதியாக தலா ரூ.2 லட்சம் கூறப்படுகிறது. ஆனால் எந்த மேம்பாட்டு பணியும் இன்று வரை நிறைவேற்றப்படவில்லை. இது நகர மன்றமா? அல்லது நாடக மன்றமா? என நகராட்சி ஆணையாளர் கன்னியப்பனை நோக்கி கேள்வி எழுப்பினார்.
இதில் ஆவேசம் அடைந்த திமுக உறுப்பினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, அதிமுக - திமுக உறுப்பினர்கள் இடையே கடும் வாக்கவாதம் ஏற்பட்டது. இதையடுத்து பேசிய நகராட்சி ஆணையாளர் கன்னியப்பன், “இதுபோன்ற சபை நாகரீகமற்ற முறையில் பேசியவர்கள் வேறு வழியின்றி அவையில் இருந்து அப்புறப்படுத்தப்படுவார்கள்” என எச்சரிக்கை விடுத்தார். அதனைத் தொடர்ந்து நகர மன்றக் கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது.