திருச்செந்தூர் முருகன் கோயிலில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி சாமி தரிசனம்! - Nayanthara in Tiruchendur - NAYANTHARA IN TIRUCHENDUR
Published : May 14, 2024, 4:29 PM IST
தூத்துக்குடி: தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையான நயன்தாரா மற்றும் அவரது கணவரும், இயக்குநருமான விக்னேஷ் சிவன் திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தனர்.
பேட்டரி கார் மூலம் கோயிலின் நுழைவு வாயிலில் இருந்து கோயிலுக்கு உள்ளே வந்த இவர்கள், முதலில் மூலவர் அபிஷேகத்தில் சாமி தரிசனம் செய்து பின், சண்முகர், சூரசம்ஹார மூர்த்தி, பெருமாள் ஆகிய சன்னதிகளில் தரிசனம் செய்தனர்.
இதனிடையே, நயன்தாராவின் வருகையை அறிந்த ரசிகர் கூட்டம் முண்டியடித்து அவருடன் செல்பி எடுக்க முயன்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் போலீசார் பலத்த பாதுகாப்புடன் நயன்தாராவை உள்ளே அழைத்துச் சென்றனர்.
சாமி தரிசனம் முடித்துவிட்டு வெளியே வந்த நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனை, போலீசார் பாதுகாப்பாக கோயிலின் சண்முகவிலாஸ் மண்டபத்தின் உள்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தங்க வைத்தனர். அங்கு அலுவலகப் பணியாளர்கள் போட்டி போட்டு நயன்தாரா, விக்னேஷ் சிவனுடன் செல்பி எடுத்தனர். இதனையடுத்து வெளியே வந்த நயன்தாரா, விக்னேஷ் சிவனுடன் ரசிகர்கள் செல்ஃபி எடுக்க முற்பட்டதால் கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.