"சிவகார்த்திகேயனுடன் இணைந்தால் அது ஆக்ஷன் படம்தான்" - விஜய் தேவரகொண்டா கொடுத்த அப்டேட் என்ன? - நடிகை பூஜா ஹெக்டே
Published : Mar 3, 2024, 7:46 PM IST
பெரம்பலூர்: பெரம்பலூரில் ஆண்டுதோறும் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகம் சார்பில் 'நட்சத்திர கலை விழா' நடைபெறும். அந்த வகையில், இந்த ஆண்டும் இந்த நிகழ்ச்சி கடந்த பிப்.27ஆம் தேதி தொடங்கி, மார்ச் 2ஆம் தேதி வரை நடைபெற்றது.
இந்த கலை விழாவில், நேற்று நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை பூஜா ஹெக்டே கலந்து கொண்டனர். அப்போது நிகழ்ச்சியின் தொகுப்பாளர், நடிகர் விஜய் தேவரகொண்டாவிடம், நீங்களும், நடிகர் சிவகார்த்திகேயனும் சேர்ந்து படம் செய்தால், அது எந்த மாதிரியான படமாக இருக்கும் எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு நடிகர் விஜய் தேவரகொண்டா, ஆக்சன் மற்றும் காமெடி கலந்த படமாகவும், அந்த படத்தில் இரு நண்பர்களாகிய நாங்கள், போலீஸ் கெட்டப்பில் நடிப்போம் எனக் கூறினார்.
மேலும், நிகழ்ச்சியின் தொகுப்பாளர் யார் இந்த படத்தை இயக்குவார் என கேட்ட கேள்விக்கு, இயக்குநர் லோகேஷ் கனகராஜ்தான் இந்த படத்தை இயக்குவார் எனக் கூறினார்.
இதனைத் தொடர்ந்து மேடையில் பேசிய நடிகை பூஜா ஹெக்டே,“நான் இந்த மாதிரியான கூட்டத்தைப் பார்த்ததில்லை மற்றும் இதை நான் விரும்புகிறேன் என்றார். நான் உள்ளே நுழைந்ததும், ரசிகர்களிடம் இருந்து இவ்வளவு பெரிய சத்தத்துடன் கூடிய எனர்ஜி வரும் என எதிர்பார்க்கவில்லை என்றார்.
இந்த எனர்ஜி வேறு எங்கேயும் கிடைக்காது. தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் மட்டுமே கிடைக்கும்” என்றார். பின்னர், நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை பூஜா ஹெக்டே சினிமா பாடலுக்கு மேடையில் நடனமாடி மகிழ்ந்தனர்.