தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

நடிகர் ராம் சரணுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கும் விழா நேரலை! - ram charan doctorate - RAM CHARAN DOCTORATE

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 13, 2024, 4:10 PM IST

Updated : Apr 13, 2024, 5:16 PM IST

சென்னை: பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரண், இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேல் உள்ளிட்டோருக்கு சென்னை வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் 14வது பட்டமளிப்பு விழாவில் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது அதன் நேரலை காட்சிகள்..பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் மகனான ராம் சரண், தெலுங்கு சினிமாவில் கடந்த 2007ஆம் ஆண்டு சிறுத்தை படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். பின்னர் ராஜமௌலி இயக்கிய மாவீரன் திரைப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. பின்னர் ராம் சரண் நடித்த ஒரு சில படங்கள் சரியாக வரவேற்பை பெறாத நிலையில், 2013ஆம் ஆண்டு ராம் சரண் நடித்த ரச்சா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பின்னர் ராம் சரண் தமிழில் வெளியான தனி ஒருவன் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்தார். மேலும் சுகுமார் இயக்கத்தில் ரங்கஸ்தளம் படத்தில் நடித்தார். இதனைத் தொடர்ந்து ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆருடன் இணைந்து ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்தார். தற்போது பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் படத்தில் நடித்து வருகிறார். 
Last Updated : Apr 13, 2024, 5:16 PM IST

ABOUT THE AUTHOR

...view details