தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

படிக்கட்டு அருகே நின்று கொண்டிருந்த பெண்.. நொடிப்பொழுதில் தவறி விழுந்த பதற வைக்கும் காட்சிகள்! - Woman fell from bus CCTV - WOMAN FELL FROM BUS CCTV

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 9, 2024, 7:59 PM IST

தேனி: ஆண்டிப்பட்டியில் உள்ள கடமலைக்குண்டு பகுதியைச் சேர்ந்தவர் தீபாலட்சுமி. இவர் நேற்று மாலை தனியார் பேருந்தில் தேனிக்கு பயணம் செய்தபோது, பேருந்தின் படிக்கட்டுக்கு அருகில் இருக்கும் பாதுகாப்புக் கம்பியை பிடித்தபடி நின்றுகொண்டு பயணம் செய்துள்ளார். இந்நிலையில், தான் பெற்ற பயணச்சீட்டை கைப்பையில் வைக்கும் போது, பிடிமானம் இல்லாமல் எதிர்பாராத விதமாக பேருந்தில் இருந்து வெளியே தவறி விழுந்துள்ளார். இதில் தலையில் படுகாயம் அடைந்த அவரை உடனையாக மீட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பின் அங்கிருந்து மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், அந்த பெண் பேருந்தில் இருந்து தவறி வெளியே விழும் சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.  இந்த வீடியோவில் தவறி விழும் பெண்ணை பேருந்து நடத்துநர் காப்பாற்ற முயற்சிக்கும் காட்சிகள் பார்ப்பவர்கள் மனதை பதைபதைக்க செய்யும் வகையில் உள்ளது. மேலும், இந்த விபத்து தொடர்பாக கடமலைக்குண்டு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details