தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

நரிக்குறவ சமூகத்தைச் சேர்ந்த மாணவன் +2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று சாதனை! - 12th public exam result 2024 - 12TH PUBLIC EXAM RESULT 2024

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 6, 2024, 5:25 PM IST

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே பல்லவராயன்பேட்டை கிராமத்தில் உள்ள நரிக்குறவர் குடியிருப்பில் 100க்கும் மேற்பட்ட நரிக்குறவ சமூகத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இச்சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் பயன்பெறும் வகையில் குடியிருப்புக்கு உள்ளேயே தனியார் அறக்கட்டளை ஒன்றின் சார்பில் சுபாஷ் சந்திரபோஸ் என்ற பெயரில் உண்டு உறைவிடப் பள்ளி அமைக்கப்பட்டு, நரிக்குறவ சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு 8-ஆம் வகுப்புவரை இலவசமாக கல்வி வழங்கப்பட்டு வருகிறது. அதன்பின்னர் கல்வியைத் தொடர மாணவர்களுக்கு அறக்கட்டளை சார்பில் தேவையான உதவிகள் செய்யப்பட்டு வருகிறது.

இந்த உறைவிடப் பள்ளியில் படித்தவர்களில் இதுவரை 23 மாணவ மாணவிகள் பட்டப்படிப்பை முடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், தற்போது நடந்து முடிந்த பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் இந்த நரிக்குறவர் குடியிருப்பைச் சேர்ந்த வீரசிவாஜி என்ற ஒரு மாணவர் மட்டும் தேர்வெழுதியிருந்த நிலையில், அவர் 303 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.

இவர் தருமபுரம் ஆதீன குருஞான சம்பந்தர் மேல்நிலைப்பள்ளியில் பயின்று பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதியிருந்தார். இந்த நிலையில், அந்த மாணவருக்கு பல்லவராயன்பேட்டையில் உள்ள உண்டு உறைவிடப் பள்ளியில் ஆசிரியர்கள் இனிப்பு வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.

மேலும், சட்டக்கல்லூரியில் பயின்று வழக்கறிஞராக ஆவதே தனது லட்சியம் என மாணவர் வீரசிவாஜி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details