Republic Day 2025 Live: டெல்லியில் களைகட்டிய குடியரசு தின விழா.. அணி வகுப்பு நேரலை! - REPUBLIC DAY 2025
Published : Jan 26, 2025, 8:00 AM IST
|Updated : Jan 26, 2025, 12:34 PM IST
டெல்லி: 1950 ஆம் ஆண்டு அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டதையும், ஒரு குடியரசாக நாட்டின் பயணத்தையும் கொண்டாடும் வகையிலும் ஒவ்வொரு வருடமும் குடியரசு தின விழா ஜனவரி 26ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், இன்று ஜனவரி 26, ஞாயிற்றுக்கிழமை இந்தியா தனது 76வது குடியரசு தினத்தை கோலாகலமாகக் கொண்டாடுகிறது. இந்த ஆண்டு குடியரசு நிகழ்விற்கு இந்தோனேசிய ஜனாதிபதி பிரபோவோ சுபியாண்டோ தலைமை விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளார். புதுதில்லியில் உள்ள கர்தவ்ய பாதையில் நடைபெறும் அணிவகுப்பில் இந்தோனேசியாவிலிருந்து வருகை தந்துள்ள ராணுவப் படையினரும் பங்கேற்க உள்ளனர். மேலும், பல்வேறு துறைகளைச் சேர்ந்த சுமார் 10 ஆயிரம் சிறப்பு விருந்தினர்கள் இந்த பிரமாண்டமான விழாக்களைக் காண அழைக்கப்பட்டுள்ளனர். இன்று காலை 9.30 மணிக்கு தேசிய போர் நினைவுச்சின்னத்தில் பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்துவதோடு குடியரசுத் தினவிழா தொடங்கும். குடியரசு தினம் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, டெல்லியில் உள்ள கடமை பாதையில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு மூவர்ணக் கொடியை ஏற்றி விழாவைத் துவக்கி வைப்பார். பின்னர், கர்தவி பாதையிலிருந்து செங்கோட்டை வரையிலான அணிவகுப்பில், ஆயுதப்படைகள், துணை ராணுவப் படைகள் மற்றும் என்சிசி, என்எஸ்எஸ் உள்ளிட்ட பிரிவுகளின் அணிவகுப்பு நடைபெறும்.
Last Updated : Jan 26, 2025, 12:34 PM IST