வேலூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரி முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி! 25 ஆண்டுகளுக்கு பின் சந்தித்து கொண்ட மாணவர்கள்! - Vellore News
Published : Jan 28, 2024, 7:15 PM IST
வேலூர்: வேலூர் மாவட்டத்தில் உள்ள தந்தை பெரியார் ஈ.வெ.ராமசாமி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் கடந்த 1996ஆம் ஆண்டு முதல் 1999ஆம் ஆண்டு வரை கல்வி பயின்ற முன்னாள் மாணவ, மாணவிகள் 25 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்து கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னாள் மாணவ மாணவிகள் அனைவரும் தங்களது குடும்பத்தோடு கலந்து கொண்டு தங்களது கல்லூரி பருவ நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
மேலும் ஆசிரியர்கள் சார்பாக முன்னாள் மாணவ, மாணவிகளுக்கு நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து தாங்கள் படித்த பழைய வகுப்பறைகளை நினைவு கூறும் வகையில் பார்த்துச் சென்றனர். இந்த நிகழ்ச்சி வேலூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியின் முன்னாள் மாணவர் அமைப்பு சங்கம் சார்பில் நடைபெற்றது.
இதுமட்டும் அல்லாது, சுமார் 300-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவ, மாணவியர்கள் தங்களது குடும்பத்துடன் இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்தனர். மேலும், விழாவில் பல்வேறு வெளிநாடுகள் மற்றும் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் முன்னாள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.