டெல்லி :தடையில்லா இணை சேவைகளை வழங்க எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஸ்டார்லிங்க் செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் 9 ராக்கெட் 46 ஸ்டார்லிங்க் செயற்கை கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டன.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கேப் கேனவரல் விண்வெளி நிலையத்தில் மறுசுழற்ச்சியில் முறையில் தயாரிக்கப்படும் பால்கன் 9 ராக்கெட் மூலம் இரண்டு தவணையாக மொத்தம் 46 ஸ்டார்லிங்க் செயற்கை கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டதாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தெரிவித்து உள்ளது.