சென்னை:நாடு முழுவதும் கோடை வெயில் வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் உயிர்கள் மட்டும் இன்றி வீட்டில் உள்ள தொழில்நுட்ப உபகரணங்களும் அதீத வெப்பத்தின் விளைவுகளுக்கு ஆளாகின்றன. அதிலும் குறிப்பாக நாம் 24 மணி நேரமும் தொடர்ந்து பயன்படுத்தும் மொபைல் ஃபோன்கள் அதீத சூடு காரணமாக வெடிக்கும் ஆபத்துகள் கூட இருக்கின்றன. இந்த சூழலில் மொபைல் ஃபோன் சூடாகாமல் இருக்கவும், சூடானால் அதை கட்டுக்குள் கொண்டுவரவும் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்துப் பார்க்கலாம்.
உங்கள் மொபைல் ஃபோன் ஐ ஃபோனாக இருந்தாலும், ஆன்ட்ராய்டு ஃபோனாக இருந்தாலும் சரி சூடாக பல்வேறு காரணங்கள் இருக்கின்றன... அதில் மிக முக்கியமான காரணங்களை இங்கே பார்க்கலாம். வெயில் மற்றும் சூடான சூழல் காரணமாக ஃபோன் வெப்பம் அடையலாம்.
பேட்டரி சூடாவதால் மொபைல் வெப்பம் அடையும்:மொபைலை நீங்கள் தொடர்ந்து பயன்படுத்திக்கொண்டே இருந்தால், அதன் பயன்பாடு அதிகரித்து பேட்டரி சூடாகும், அதனை தொடர்ந்து மொபைலின் ஒட்டுமொத்த பகுதியும் வெப்பம் அடையும்.
Recent Apps-களை க்ளியர் செய்யவும்:உங்கள் மொபைலை நீங்கள் பயன்படுத்திய பிறகு Recent Apps-களை க்ளியர் செய்ய வேண்டும். இல்லை என்றால் அது தொடர்ந்து வேலை செய்துகொண்டே இருக்கும். இதன் காரணத்தாலும் உங்கள் மொபைல் வெப்பம் அடையும்.
நீண்ட நேரம் சார்ஜ் போடுதல்:அதிக வெப்பம் அடைவதற்கான மற்றொரு காரணம் அதிக நேரம் சார்ஜ் செய்வது. மேலும் இடைவெளி விட்டு மீண்டும், மீண்டும் சார்ஜ் போடுவது. இதுபோன்ற காரணங்களால் உங்கள் மொபைல் சூடாகும்போது சில நேரங்களில் அது வெடிக்கவும் வாய்ப்பு உள்ளதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். மேலும், மொபைலை பாதுகாப்புடன் பயன்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்துகின்றனர்.
உங்கள் மொபைலை குளிர்விக்க 5 வழிகளை இங்கே பார்க்கலாம்.!