தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / technology

டாடா நெக்சான் சிஎன்ஜி, மாருதி ஸ்விஃப்ட் காருக்கு போட்டியா? டர்போ எஞ்சினுடன் ரூ.8.99 லட்சதிற்கு அறிமுகம்! - Tata Nexon CNG features - TATA NEXON CNG FEATURES

Tata Nexon CNG: டாடா தனது பட்டியலில் புதிய நெக்சான் சிஎன்ஜி காரை இணைத்துள்ளது. மூன்று சிலிண்டர்கள் அடங்கிய டர்போ பெட்ரோல் எஞ்சினுடன் இந்த கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Tata nexon CNG article thumbnail
டாடா நெக்சான் சிஎன்ஜி கார் அறிமுகம். (Tata Motors)

By ETV Bharat Tech Team

Published : Sep 25, 2024, 1:19 PM IST

இந்திய வாகனப் பயனர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையில் டாடா நிறுவனம் தங்களின் புதிய டாடா நெக்சான் சிஎன்ஜி (Tata Nexon CNG) காரை அறிமுகம் செய்தது. டாடா தங்களின் சிஎன்ஜி கார்களை i-CNG என்று அழைக்கிறது. மொத்தம் எட்டு வகைகளில் இந்த கார் இந்திய சாலைகளை அலங்கரிக்க உள்ளது.

குறிப்பிட்டபடி, ஸ்மார்ட் ஆப்ஷனல் (Smart (O)), ஸ்மார்ட் பிளஸ் (Smart+), ஸ்மார்ட் பிளஸ் எஸ் (Smart+ S), ப்யூர் (Pure), ப்யூர் எஸ் (Pure S), கிரியேட்டிவ் (Creative), கிரியேட்டிவ் பிளஸ் (Creative +), ஃபியர்லெஸ் பிளஸ் பிஎஸ் (Fearless+ PS) ஆகிய எட்டு மாடல்கள் வரவுள்ளன. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.8.99 லட்சம் முதல் ரூ.14.59 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

டாடா நெக்சான் பெட்ரோல் மாடல்களை ஒப்பிடுகையில், சிஎன்ஜி மாடலுக்கு கூடுதலாக ஒரு லட்ச ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. சாதாரண நெக்சான் மாடல்களை விட சில கூடுதல் அம்சங்கள் புதிய நெக்சான் சிஎன்ஜி காரில் சேர்க்கப்பட்டுள்ளது.

டாடா நெக்சான் சிஎன்ஜி கார்களுடன் அறிமுகம் செய்யப்பட்ட மின்சார நெக்சான் கார். (Tata Motors)

முக்கியமாக, இந்த வகை கார் தொகுப்புகளில் முதன்முறையாக பனோரமிக் சன்ரூஃப் (Panoramic Sunroof), 1.25-அங்குல (inch) இன்ஃபோடெயின்மென்ட் திரை கொடுக்கப்பட்டுள்ளது. புதிய நெக்சான் சிஎன்ஜி காருடன் மின்சார நெக்சான் காரும் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது நெக்சான் சிஎன்ஜி கார்களின் கூடுதல் சிறப்பம்சங்களை கீழ்வருமாறுக் காணலாம்.

டாடா நெக்சான் சிஎன்ஜி சிறப்பம்சங்கள்:

  • வயர்லெஸ் சார்ஜர்.
  • 360 டிகிரி கேமரா.
  • 8 சரவுண்டு ஸ்பீக்கர்கள்.
  • குளிர்ந்த காற்றை வெளியிடும் முன்பக்க இருக்கைகள் (Ventilated front seats).
  • ஆட்டோமேட்டிக் முகப்பு எல்இடி விளக்குகள் (Auto Headlight).
  • ஆட்டோ டிம்மிங் ஐஆர்விஎம் (Auto dimming IRVM).
  • தானாக மழையை அறிந்துகொள்ளும் வைப்பர்ஸ் (Rain sensing wipers).
  • லெதர் இருக்கைகள்.
  • ஆறு ஏர்பேக்குகள்.
  • முன்பக்க பார்க்கிங் சென்சார்கள்.

டாடா நெக்சான் சிஎன்ஜி விலைப் பட்டியல்:

டாடா நெக்சான் சிஎன்ஜி காரின் பூட் இடவசதி (Tata Motors)
  • ஸ்மார்ட்:
வகைகள் ஸ்மார்ட் ஸ்மார்ட்+ ஸ்மார்ட்+ எஸ்

விலை

(எக்‌ஸ்-ஷோரூம்)

ரூ.8.99

லட்சம்

ரூ.9.69

லட்சம்

ரூ.9.99

லட்சம்

  • ப்யூர்:
வகைகள் ப்யூர் ப்யூர் எஸ்

விலை

(எக்‌ஸ்-ஷோரூம்)

ரூ.10.69

லட்சம்

ரூ.10.99

லட்சம்

  • கிரியேட்டிவ்:
வகைகள் கிரியேட்டிவ் கிரியேட்டிவ்+

விலை

(எக்‌ஸ்-ஷோரூம்)

ரூ.11.69

லட்சம்

ரூ.12.19

லட்சம்

  • ஃபியர்லெஸ்:
வகை ஃபியர்லெஸ்+ பிஎஸ்

விலை

(எக்‌ஸ்-ஷோரூம்)

ரூ.14.59

லட்சம்

டாடா நெக்சான் சிஎன்ஜி எஞ்சின்:

டாடா நெக்சான் சிஎன்ஜி காரானது, மூன்று சிலிண்டர்கள் அடங்கிய 1.2 லிட்டர் டர்போ-சார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் கொண்டு இயக்கப்படுகிறது. இது 100 பிஹெச்பி (bhp) ஆற்றலையும், 170 என்எம் (Nm) டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. இதில் கொடுக்கப்பட்டிருக்கும் டாடாவின் பிரத்யேக இரட்டை சிஎன்ஜி டேங்க், இடவசதியை அதிகரித்து பயணிகளுக்கு பாதுகாப்பான பயணத்தை வழங்குகிறது.

ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் டாடா இணையதளம் அல்லது நேரடி முகவர்களை தொடர்புகொள்வதன் வாயிலாக புதிய டாடா நெக்சான் சிஎன்ஜி காரை முன்பதிவு செய்து பெற்றுகொள்ளலாம். இதன் விற்பனை விரைவில் தொடங்கும் என டாடா தெரிவித்துள்ளது. இதற்கு போட்டியாக களத்தில் மாருதி சுசூகி சிஎன்ஜிகார்கள் இருக்கும்.

இதையும் படிங்க:

  1. சந்திரயான் திட்டம்: நிலவில் 160 அடி அகலம் உள்ள பள்ளம் கண்டுபிடிப்பு! - PRAGYAN ROVER FOUND WIDE CRATER
  2. ஐபோன் 16 சீரிஸ் விற்பனை தொடக்கம்: காலை முதல் வரிசையில் காத்திருக்கும் வாடிக்கையாளர்கள்! - IPHONE 16 SERIES Sale
  3. ஜீரோ 40 5ஜி: ஐபோன் iOS 18-க்கு போட்டி நாங்கதான்; IR ரிமோட், JBL ஸ்பீக்கர்ஸ், Folax அசிஸ்டன்ட் என பல அம்சங்கள்! - Infinix Zero 40 5G AI Phone

ABOUT THE AUTHOR

...view details