சென்னை: தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் ஒரு கார் பிரியர் என்பதும், அவரிடம் விலை குறைந்த கார் முதல் விலையுயர்ந்த கார்கள் பலவும் இருப்பது அனைவரும் அறிந்ததே. அதிலும் குறிப்பாக, 2012ஆம் ஆண்டு விஜய் வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காருக்கு முறையாக வரி செலுத்தவில்லை என்று சில ஆண்டுகளுக்கு முன்பு குற்றச்சாட்டு எழுந்து, அந்த பிரச்சினை நீதிமன்றம் வரை சென்றது இன்றளவும் பேசப்படுகிறது.
இந்த நிலையில், சில வாரங்களுக்கு முன்பு விஜய்க்கு பிரச்னையாக அமைந்த ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரை விற்பனை செய்யவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள்ளாக, தற்போது விஜயின் வீட்டிலிருந்து சொகுசு கார் ஒன்று வெளியில் வருவது போன்ற வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும், இந்த கார் குறித்த தகவல்களை அறிவதில் கார் பிரியர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அப்படி அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் படி விஜய் வாங்கியுள்ள கார் தான் லெக்சஸ் எல்எம் 350எச் (Lexus LM 350h) என்ற எம்பிவி வகை சொகுசு கார்.
Lexus LM 350h: இந்தியாவில் தற்போது மிகவும் அதிக விலையில் விற்பனை செய்யப்படும் எம்பிவி வகையைச் சேர்ந்த கார் என்றால் அது இந்த லெக்சஸ் எல்எம் 350எச் தான். டொயோட்டா நிறுவனத்தினுடையதே இந்த லெக்சஸ், டொயோட்டா நிறுவனத்தின் விலையுயர்ந்த சொகுசு கார்களை லெக்சஸ் பிராண்டின் கீழ் விற்பனை செய்யப்படுகிறது.
வேரியண்ட்: இந்த லெக்சஸ் எல்எம் 350எச் எம்பிவி காரானது 7 சீட்டர் விஐபி (LM 350h 7-Seater VIP) மற்றும் 4 சீட்டர் அல்ட்ரா லக்சுரி (LM 350h 4-Seater Ultra Luxury) என இரண்டு வேரியண்ட்களாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் 4 சீட்டர் வேரியண்ட் தான் அதிக சொகுசானதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், 7 சீட்டர் வேரியண்டானது 3 வரிசை சீட்களைக் கொண்டிருக்கும் நிலையில், 4 சீட்டர் வேரியண்டானது வெறும் இரண்டு வரிசை சீட்களை மட்டுமே கொண்டுள்ளது. அதுவும் இரண்டாவது வரிசையில் இரண்டு சொகுசு கேப்டன் சீட்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. மற்றபடி, இரண்டு வேரியண்டுகளுக்குமே கிட்டத்தட்ட ஒரே மாதிரியான பியூச்சர்ஸ்களே கொடுக்கப்பட்டுள்ளது.
இன்டீரியர் வசதிகள்: 4 சீட்டர் வேரியண்டில் முன்வரிசை இருக்கைகளையும், பின்வரிசை இருக்கைகளையும் பிரிக்கும் வகையில் ஒரு தடுப்பு இடம்பெற்றுள்ளது. இந்தத் தடுப்பானது பின்வரிசை இருக்கையில் இருப்பவர்களுக்கு தனிமையுடன் கூடிய சொகுசு பயண அனுபவத்தைக் கொடுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு கூடுதல் சிறப்பு சேர்க்கும் வகையில், 48 இன்ச் அல்ட்ராவைடு ஸ்கிரீன் கொண்டுள்ளது. அதை ரிமூவ் செய்ய ரியரில் மல்டி ஆப்ரேஷன் பேனல், அட்வான்ஸ் இன்ஃப்ராரேட் மேட்ரிக்ஸ் சென்சார் ஏர் கண்டிஷனிங் சிஸ்டம், குளிர்சாதனப் பெட்டி, 64 கலர் இன்டீரியர் இலுமுனேசன், அம்பர்லா ஸ்டாண்ட் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.