தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசியல் காரணங்களுக்காக ஜாதி, மதம், மொழி, இனம் அடிப்படையில் மக்களை பிளவுபடுத்துகிறார்கள்...ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு! - GOVERNOR RN RAVI

அரசியல் காரணங்களுக்காக ஜாதி மதம் மொழி இனம் என்ற அடிப்படையில் மக்களை பிளவுபடுத்துகிறார்கள் என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்துத் தெரிவித்துள்ளார்.

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உருவான தினவிழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரை
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உருவான தினவிழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரை (Image credits-TAMIL NADU RAJ BHAVAN)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 4, 2024, 9:44 PM IST

Updated : Nov 4, 2024, 10:55 PM IST

சென்னை:அரசியல் காரணங்களுக்காக ஜாதி, மதம் ,மொழி ,இனம் என்ற அடிப்படையில் மக்களை பிளவுபடுத்துகிறார்கள் என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்துத் தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர் என் ரவி தலைமையில் தமிழ்நாடு, பஞ்சாப், மத்திய பிரதேசம், கேரளா, கர்நாடகா, ஹரியானா, சத்தீஸ்கர், ஆந்திர பிரதேசம், புதுச்சேரி, லட்சத்தீவு, டெல்லி, சண்டிகர், உத்தராகண்டம், அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவுகள், லடாக், ஜம்மு மற்றும் காஷ்மீர் ஆகிய இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உருவான தினவிழா கொண்டாட்டம் இன்று நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர் ‌என் ரவி, "இந்தியாவில் வெவ்வேறு மாநிலங்களில் மக்கள் வசித்தாலும் கூட மாநில உருவான தின கொண்டாடப்படும் பொழுது அனைவரும் ஒற்றுமையாக இந்த தினத்தை கொண்டாடுகிறோம். ஒவ்வொரு மாநிலங்கள் உருவான தினத்தை அந்தந்த மாநிலங்களே அரசின் சார்பாக சில கலாச்சார நிகழ்வுகளை நடத்தி மாநில தினத்தை கொண்டாடி வந்தனர்.

இதையும் படிங்க:"19 அரசு பல்கலைக்கழகங்களில் குறித்த நேரத்தில் பட்டமளிப்பு விழாக்கள் நடத்தப்பட்டுள்ளன" ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம்

இந்நிலையில் பிரதமர் மோடியின் முயற்சியால் இந்தியாவில் உள்ள அனைத்து மாநில உருவான தினத்தைஸஇந்தியா முழுவதும் கொண்டாட வேண்டும் என்று கூறினார். அதன்படி இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் பல்வேறு மாநில உருவான தினம் கொண்டாடப்படுகிறது. பாரதம் என்பது ரிஷிகளாலும் முனிவர்களாலும் உருவாக்கப்பட்டது பழைய பாரதத்தில் பிரிவினை என்பது அறவே கிடையாது. மேலும் பெரும்பான்மையினர் சிறுபான்மையினர் என்ற பாகுபாடு கிடையாது.

ஆங்கிலேயர் ஆட்சியில் தான் இந்தியாவில் பிரிவினைவாதம் உருவானது சிறுபான்மையினர் பெரும்பான்மையினர் என்று பிரித்தாளும் சூழ்ச்சியை ஆங்கிலேயர் மேற்கொண்டனர். பாரதம் என்பது ஒரே நாடு அதில் பல்வேறு மாநிலங்கள் நிர்வாக வசதிக்காக பிரிக்கப்பட்டது.இந்தியா அமெரிக்கா போல் மாகாணங்களை கொண்டது இல்லை ஒரே இந்தியா தான் அதில் பல்வேறு மாநிலங்கள் உருவாக்கப்பட்டது. அரசியல் காரணங்களுக்காக ஜாதி மதம் மொழி இனம் என்ற அடிப்படையில் மக்களை பிளவுபடுத்துகிறார்கள்.

இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பு மக்கள் எந்த மாநிலத்திற்கும் சென்று வணிகம் செய்து வந்தனர். அப்போதய மக்கள் அவர்களை அரவனைப்போடு கவனித்தனர் இத்தகைய கலாச்சாரத்தை நாம் மறக்கக்கூடாது. பாரதம் பல்வேறு கலாச்சாரங்களை கொண்டது.ஒரே கலாச்சாரம் என்பது பாரதத்தில் இல்லை. ஆங்கிலேயர் காலத்தில் கொண்டுவரப்பட்ட கலாச்சாரங்களே இப்போதைய இளைஞர்கள் கடைப்பிடித்து வருகின்றனர் .இது மாற வேண்டும். இன்றைய இளைஞர்கள் இந்திய கலாச்சாரத்தோடு ஒருங்கிணைந்து செல்ல வேண்டும்.மாநிலங்கள் உருவான தினத்தை கொண்டாடுவதில் நாம் பெருமை கொள்கிறோம்," என தெரிவித்தார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

Last Updated : Nov 4, 2024, 10:55 PM IST

ABOUT THE AUTHOR

...view details