விருதுநகர்: சாத்தூர் - கோவில்பட்டி இடையேயான தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள உணவகம் அருகே, காட்டுப்பகுதியில் இருந்த மோட்டார் அறை இடிந்து தரைமட்டமாகி கிடந்துள்ளது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சந்தேகத்தின் அடிப்படையில், சாத்தூர் தாலுகா காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர்.
அத்தகவலின் பேரில் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தாலுகா போலீசார், இடிந்து கிடந்த மோட்டார் அறையை சோதனை மேற்கொண்ட. அப்போது மோட்டார் அறையில் சட்ட விரோதமாக பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்தது தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க:தருமபுரி தொப்பூர் விபத்தில் பலி எண்ணிக்கை 4ஆக உயர்வு; முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்!
இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், சட்டவிரோதமாக பட்டாசு தயாரிக்கப்பட்டதும், பட்டாசு தயாரிப்பின் போது ஏற்பட்ட வெடி விபத்தில் கட்டடம் தரைமட்டமானதும் தெரியவந்துள்ளது. மேலும், சட்ட விரோத பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்த மீனம்பட்டியைச் சேர்ந்த அஜீத்(23) என்பவர், உடல் சிதறிய நிலையில் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:திருப்பூரில் செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல்..! காவல்துறைக்கு பத்திரிகையாளர் சங்கங்கள் கண்டனம்!