திருவள்ளூர்:ஆவடி காமராஜர் நகர், தாமரை தெருவைச் சேர்ந்தவர் குரு சத்யா (32). கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி திவ்யா (24). காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், குரு சத்யாவுக்கு, ஆவடி காமராஜர் நகரைச் சேர்ந்த 30 வயது பெண்ணுடன் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் தம்பதிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதன் காரணமாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்படவே, திவ்யா விவாகரத்து கோரி பூவிருந்தவல்லி நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்துள்ளார். இந்நிலையில், திவ்யா தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் தனது தாயுடன் வசித்து வருகிறார். அங்கு அடிக்கடி செல்லும் குரு சத்யா திவ்யாவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இதையும் படிங்க:"கஸ்தூரி முன்ஜாமீன் கோரிய மனு".. ஐகோர்ட் மதுரை கிளையில் விசாரணை துவக்கம்!
இதனால் ஆத்திரமடைந்த திவ்யா ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மாலை இருவரும் வழக்கு விசாரணைக்கு சென்ற போது குரு சத்யா, திவ்யாவை தகாத வார்த்தையில் பேசியதாக கூறப்படுகிறது.