தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பழனியில் பொள்ளாச்சி சம்பவமா? காதலனுடன் இருக்கும் வீடியோவை காட்டி அழைத்த இளைஞரால் பரபரப்பு! - dindigul pocso case - DINDIGUL POCSO CASE

திண்டுக்கல்லில் காதலனோடு இருக்கும் புகைப்படத்தை எடுத்து வைத்துக்கொண்டு, சிறுமிக்கு பாலியல் மிரட்டல் விடுத்த இளைஞரை போக்சோ வழக்கில் போலீசார் கைது செய்துள்ளனர்.

பழனி காவல் நிலையம்
பழனி காவல் நிலையம் (credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 14, 2024, 3:11 PM IST

பழனி: திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் 17 வயதான சிறுமி படித்து வருகிறார். இவர் தனது காதலனுடன் பேருந்தில் சென்றது, அருகில் இருப்பது போன்ற வீடியோவை பழனியைச் சேர்ந்த இளைஞர் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

பின்னர், அந்த மாணவி கல்லூரிக்குச் சென்றபோது காரில் வந்த இளைஞர், ''என்னுடைய காரில் ஏறு, இல்லையென்றால் உன் காதல் விவகாரத்தை அம்மாவிடம் சொல்லி விடுவேன்'' என்று கூறி மாணவியை காரில் கட்டாயப்படுத்தி ஏற்றியுள்ளார்.

அப்போது அந்த மாணவி காரில் ஏறும்போதே நைசாக ஆடியோ ரெக்கார்ட் செய்துள்ளார். அந்த ஆடியோவில் இளைஞர், '' உன் காதலனோடு தான் உல்லாசமாக இருப்பாயா, என்னுடன் இருக்க மாட்டாயா? என கேட்க, அதற்கு சிறுமி, நான் நேற்றே தற்கொலை செய்துகொண்டிருப்பேன் என கெஞ்சியுள்ளார்.

அப்போது இளைஞர், மாணவியிடம் தகாத முறையில் பேசுவது அந்த ஆடியோவில் பதிவாகியுள்ளது. மேலும், அந்த ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.

இதனை அடுத்து, குழந்தைகள் நல அலுவலக அதிகாரிகள், பழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதனைத் தொடர்ந்து, அந்த இளைஞரை போக்சோ வழக்கு மற்றும் பிற வழக்குகளில் கைது செய்த போலீசார், மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details