திருவண்ணாமலை:திருவண்ணாமலை அடுத்த மாதலம்பாடி கிராமத்தில் அண்ணன் சக்கரை (72) மற்றும் தம்பி கண்ணன் (70) ஆகிய இருவரும், தங்களுக்குச் சொந்தமான நிலத்தில் தனித்தனியே விவசாயம் செய்து வந்த நிலையில், இருவருக்கும் சொந்தமான கிணற்றிலிருந்து தண்ணீர் பாய்ச்சுவதில் ஏற்பட்ட தகராறில், தம்பி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சர்க்கரை, கண்ணன் இருவரும் தங்களது நிலத்தில் மணிலா பயிரிட்டு வந்ததாகவும், மணிலா பயிருக்கு கிணற்றிலிருந்து தண்ணீர் பாய்ச்சுவதில், இரண்டு பேர் இடையே மூன்று நாட்களாக தகராறு இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று (பிப்.17) மாலை தம்பி கண்ணன் விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்றுள்ளார்.
அப்போது சக்கரை மற்றும் அவரது மகன்கள் ஞானசேகர், செல்வமணி மற்றும் சித்தி மகன் வேடி ஆகியோருக்கும், கண்ணன் குடும்பத்தாருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அந்த கைகலப்பில் அண்ணன் சக்கரை, கண்ணனை கத்தியால் குத்தியதாக சொல்லப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த கண்ணன் உயிருக்குப் போராடிய நிலையில், உறவினர்களால் ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.