தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரயிலில் பயணிகளுக்கு மயக்க காபி கொடுத்து கைவரிசை காட்டிய இளம்பெண் கைது! - Young Woman arrested for stealing

Young Woman arrested for stealing: சென்னை ரயிலில் பயணிகளுக்கு மயக்க மருந்து கலந்த காபி கொடுத்து அவர்களிடம் கைவரிசை காட்டிய இளம் பெண்ணை கைது செய்த எழும்பூர் ரயில்வே போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 4, 2024, 5:27 PM IST

கைதான இளம்பெண்
கைதான இளம்பெண் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: கடந்த ஜூன் 12 ஆம் தேதி, தஞ்சாவூரில் இருந்து சென்னை எழும்பூருக்கு வந்து கொண்டிருந்த மண்ணை எக்ஸ்பிரஸ் ரயிலின் ஒரு பெட்டியில் தன்வந்திரி என்கிற பெண் ஒருவர் பயணம் செய்துள்ளார். அப்போது அவர் அருகில் அமர்ந்து இளம்பெண் ஒருவர் பயணித்துள்ளார்.

ரயில் தாம்பரம் ரயில் நிலையத்திற்கு வந்தபோது அந்த இளம் பெண், தன்வந்திரியிடம் தனக்கு அசதியாக இருப்பதால் தேநீர் குடிக்க போகிறேன் என்றும், சர்க்கரை குறைவாக இருக்கும் தேநீரை வாங்கப்போவதாகவும், உங்களுக்கு ஏதாவது வேண்டுமா என்று கேட்டுள்ளார். அதற்கு தன்வந்திரி தனக்கு காப்பி வேண்டும் என்று கூறியுள்ளார்.

உடனே அந்த இளம்பெண் வாங்கி வந்த காபியை குடித்தவுடன் தன்வந்திரி மயக்கம் அடைந்ததாகவும், அதன் பிறகு எழுந்து பார்த்தபோது தனது லேப்டாப், கைப்பை மற்றும் தனக்கு அருகே இருந்த இளம்பெண் மாயமாகி இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுதொடர்பாக சென்னை எழும்பூர் ரயில் நிலைய காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த ரயில்வே போலீசார் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில், கடந்த ஜூன் 17ஆம் தேதி சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து தஞ்சாவூர் புறப்பட்ட மண்ணை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த கண்ணகி என்ற பெண்ணுக்கும் இதேபோன்று இளம்பெண் ஒருவர் காப்பி வாங்கி கொடுத்து, அவர் மயங்கியவுடன் கழுத்தில் அணிந்து இருந்த தங்கச் சங்கிலி மற்றும் கவரிங் நகைகளை பறித்து சென்றதாக புகார் அளித்திருந்தார்.

இந்த இரண்டு வழக்குகளும் ஒரே பாணியில் இருப்பதைப் பார்த்து சந்தேகமடைந்த எழும்பூர் ரயில்வே போலீசார், அச்சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி தீவிரமாக விசாரணை நடத்தினர். அப்போது இரண்டு சம்பவங்கள் நடைபெற்ற ரயில் பெட்டியிலும் இருந்தும் ஒரே இளம்பெண் இறங்கிச் சென்றதை போலீசார் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து, பயணியின் பி.என்.ஆர் எண்ணை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அப்பெண் திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி பகுதியைச் சேர்ந்த 23 வயதான பூமிக்கா என தெரியவந்துள்ளது. இதையடுத்து தனிப்படை போலீசார் அவரது வீட்டிற்கு சென்று ஆய்வு மேற்கொண்டபோது, ரயிலில் இரண்டு பெண் பயணிகள் தவறவிட்ட அனைத்து பொருட்களும் அங்கு இருந்துள்ளன. அதனை கைப்பற்றிய போலீசார், பூமிக்காவையும் கைது செய்து சென்னை அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நடத்த தடை இல்லை - உயர் நீதிமன்றம் உத்தரவு! - Thiruvanmiyur Pamban Swamy Temple

ABOUT THE AUTHOR

...view details