சென்னை:சென்னையின் பிரதான பகுதிகளான அண்ணா சாலை, காமராஜர் சாலை உள்ளிட்ட சாலைகளில், உலக டிராபிக் சிக்னல் தினத்தை முன்னிட்டு ஹார்ட்டின் வடிவிலான சிக்னலை சென்னை போக்குவரத்து காவல் துறை இன்று ஒளிரவிட்டுள்ளது.
சாலைப் பயணத்தின்போது பாதுகாப்பு தரும் போக்குவரத்து விளக்குகளுக்கு கட்டுப்பட்டு நடந்தாலே பல விபத்துகள் தடுக்கப்படும் என்பதால் முதன் முதலில் இந்த போக்குவரத்துக்கான எச்சரிக்கை ஒளி விளக்குகளை அறிமுகப்படுத்தியவர் ஜேம்ஸ் .
1914 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி அன்று, அமெரிக்க நகரான ஓஹியோ கிளீவ்லேண்டில் உள்ள யூக்ளிட் அவென்யூவில் ஜேம்சால் பொருத்தப்பட்ட மின்சாரத்தில் இயங்கும் சிக்னல் தான் முதல் போக்குவரத்து சிக்னலாக கருதப்படுகிறது. இந்த மின்சார டிராபிக் விளக்குகள் மனிதரின் கைகளால் இயக்கும் வண்ணம் அப்போது இருந்தது.