தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ராமநாதபுரம் பள்ளியில் நடைபெற்ற கல்வெட்டுகள் பயிலரங்கம்! - INSCRIPTIONS WORKSHOP

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற பழந்தமிழ் கல்வெட்டுகள் பயிலரங்கம் மற்றும் கண்காட்சியில் கலந்து கொண்ட ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவன தலைவர் வே.ராஜகுரு கல்வெட்டுகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கினார்.

கல்வெட்டுகள் பயிலரங்கம்
மாணவர்களுக்கு விளக்கும் தொல்லியல் ஆய்வாளர் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 18, 2024, 3:47 PM IST

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி, சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்றத்தின் சார்பில் பழந்தமிழ் கல்வெட்டுகள் பயிலரங்கம் மற்றும் கண்காட்சி நடைபெற்றன. இதில் 9ஆம் வகுப்பு மாணவர் ச.ரோகித் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

நிகழ்வுக்கு தலைமை தாங்கிய பள்ளித் தலைமையாசிரியர் மகேந்திரன் கண்ணன் பேசியபோது, “மாணவர்கள் பள்ளியில் பயிலும் காலத்திலேயே தமிழ் மொழியை நன்றாகப் படிக்கவும், எழுதவும் பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் வழியாகத் தான் தமிழ் மொழியின் தொன்மையான கல்வெட்டுகளின் சொற்களைப் படிக்க இயலும். அதற்கான ஒரு நல்வாய்ப்பாக இப்பயிலரங்கம் அமைந்துள்ளது” என்றார்.

மாணவர்களுக்கு விளக்கும் தொல்லியல் ஆய்வாளர் (Credits - ETV Bharat Tamil Nadu)

இதையும் படிங்க:தூத்துக்குடியில் தேசிய அளவிலான துடுப்பு படகு போட்டி துவக்கம்!

ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவரும், மன்றச் செயலருமான வே.ராஜகுரு, தமிழ்நாட்டின் வரலாறு எழுத உதவும் அறிவியல்பூர்வமான சான்றாக உள்ள, தமிழி, வட்டெழுத்து, தமிழ், கிரந்தம், அரபி, தேவநாகரி, தெலுங்கு, கன்னடம் ஆகிய கல்வெட்டுகள் பற்றி மாணவர்களுக்கு படங்கள் மூலம் விளக்கினார். ஒன்பதாம் வகுப்பு மாணவி ரா.மதுஜாஸ்ரீ நன்றி கூறினார்.

பின், அண்மையில் ராஜராஜசோழன் பெயர் பொறித்த காசுகளை கண்டெடுத்த மாணவிகள் மணிமேகலை, கனிஷ்காஸ்ரீ, திவ்யதர்ஷினி ஆகியோரைப் பாராட்டி புத்தகங்கள் பரிசளிக்கப்பட்டன. பின்னர் நடந்த கண்காட்சியில், பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த தமிழி, வட்டெழுத்து, தமிழ் கல்வெட்டுகளின் மைப்படிகளையும், அதில் எழுதப்பட்டிருந்த கல்வெட்டு எழுத்துகளையும் படித்து 2 ஆயிரம் ஆண்டுகளில் படிப்படியாய் தமிழ் எழுத்துகள் அடைந்த மாற்றங்களைக் கண்டு மாணவர்கள் அதிசயித்தனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details