தமிழ்நாடு

tamil nadu

மாரத்தான் ஓட்டத்தில் இது ரொம்ப புதுசு; பெண்கள் சேலை அணிந்து பங்கேற்பு! - marathon

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 11, 2024, 4:43 PM IST

Marathon: சென்னையில் பழங்குடியின பெண்களுக்கு மாதவிடாய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தனியார் அமைப்புகள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் பெண்கள் சேலை அணிந்து கொண்டு ஓடினர்.

மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்ற பெண்கள்
மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்ற பெண்கள் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: சென்னையில் மாராத்தான் ஓட்டம் நிகழ்வு இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 700க்கும் அதிகமான பெண்கள் முதல்முறையாக புடவை அணிந்து மூன்று கிலோமீட்டர் தூரம் ஓடினர். இந்நிகழ்ச்சியை தனியார் அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்தன. இதில் சிறியவர்கள், பெரியவர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

மாரத்தான் ஓட்டம் (Credits - ETV Bharat Tamil Nadu)

இந்நிகழ்ச்சியின் நோக்கம் பெண்களின் மாதவிடாய் சுகாதாரம் குறித்தும், மாதவிடாய் நேரங்களில் அவர்கள் பின்பற்ற வேண்டிய குறிப்புகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்றது. குறிப்பாக பழங்குடியின பெண்களுக்கு மாதவிடாய் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்துடன் நடைபெற்றது.

மேலும் இந்த மாரத்தான் டிக்கெட் மூலம் கிடைத்த நிதியின் மூலமாக பழங்குடியின பெண்களுக்கு நாப்கின் உள்ளாடைகள் போன்ற பொருட்களை வாங்கி கொடுக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர். இதில், வெளி மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் இருந்து வந்த பல பெண்கள் புடவை அணிந்து இந்த மாரத்தானில் கலந்து கொண்டனர்.

சிறப்பு விருந்தினராக உயர் நீதிமன்ற நீதிபதி விமலா, வழக்கறிஞர் ஆதிலட்சுமி, பெண் போலீஸ் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். மேலும் மாராத்தான் நிகழ்ச்சியின் இறுதியில் பார்வையாளர்களுக்கும், ஓடியவர்களுக்கும் மரக்கன்று வழங்கப்பட்டது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க:பெண்களுக்கான விடுதலை வாக்கத்தான்.. மதுரையில் களைக்கட்டிய 78ஆவது சுதந்திர தினம் கொண்டாட்டம்..! - 78th Independence Day

ABOUT THE AUTHOR

...view details