சென்னை: ஆசிரியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஏழாவது ஊதியக் குழுவின் நிலுவைத்தொகை நாளை(18.9.2024)க்குள் வழங்கப்படவில்லை எனில் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் மேற்கொள்ளப்படும் என தமிழக அரசுக்கு எச்சரிக்கை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னைப் பல்கலைக்கழக ஆசிரியர் மற்றும் அலுவலர் சங்கங்ககளின் கூட்டு நடவடிக்கைக்குழுவின் செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் உயர்கல்வித்துறை செயலாளருக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், "சென்னைப் பல்கலைக்கழக ஆசிரியர் மற்றும் அலுவலர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவின் செயற்குழுக் கூட்டம் 13.9.2024 அன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு தங்களின் உடனடி நடவடிக்கைக்கு சமர்ப்பிக்கப்படுகின்றது.
சென்னைப் பல்கலைக்கழகத்தில் நியமிக்கப்பட்ட 22 பேராசிரியர்களின் நியமனம் குறித்து உயர்நீதிமன்ற ஆணையின்படி விசாரணைக்குழு அமைக்கபட வேண்டும். மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய பேராசிரியர்கள் முடிவெடுக்கும் முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்கள் இந்த விசாரணை முடியும் வரையில் பதவியில் இருந்து விலகி இருக்க வேண்டும்.
ஆசிரியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஏழாவது ஊதியக்குழுவின் நிலுவைத் தொகை வருகின்ற 18.9.2024க்குள் வழங்கப்படவில்லை எனில் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் மேற்கொள்ளப்படும்.
ஏற்கனவே பதவி உயர்வு (CAS) பெற்ற ஆசிரியர்களுக்கு உரிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கிட வேண்டும்.
ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கும்போது (CAS) நிதிக்குழுவின் ஒப்புதலை பெற வேண்டும் என்ற ஒரு புதிய நடைமுறையைப் புகுத்தி பதவி உயர்வுகளை வழங்கு வழங்குவதில் தேவையற்ற காலதாமதத்தை நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. இந்நடவடிக்கையை கைவிட்டு ஏற்கனவே உள்ள நடைமுறையின்படி பதவி உயர்வுகளை வழங்க நிர்வாகம் உடனடியாக நவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
அலுவலர்களுக்கு ஏற்கனவே உரிய காலத்தில் வழங்கப்படாமல் இருந்து பதவி உயர்வுகள் காலந்தாழ்த்தி 2024 ஆம் ஆண்டு ஜூலை 31 வழங்கப்பட்டன. உயர்கல்வித்துறை செயலாளர் பரிந்துரையின்படி ஆட்சிமன்றக்குழு கூட்டத்தின் ஒப்புதலோடு, பதவி உய உயர்வுகளைப் பெற்ற அலுவலர்களுக்கு இன்று வரை உரிய பணியிடங்கள் அளிக்கப்படவில்லை ஆகையால் அவர்களுக்கு உடனடியாக இன்றே பணியிடங்களுக்கான ஆணைகளை வழங்கிட வேண்டும்.
கௌரவ விரிவுரையாளர்களுக்கு உடனடியாக பணி வழங்கப்பட வேண்டும்.
இந்தக் கோரிக்கைகளை உடனடியாக நிர்வாகம் நிறைவேற்றவில்லை என்றால், எதிர்வரும் பட்டமளிப்பு விழா (Convocation) நிகழ்வுகளை ஆசிரியர்களும் அலுவலர்களும் புறக்கணிக்க வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதேபோல், சென்னைப் பல்கலைக்கழக ஆசிரியர் மற்றும் அலுவலர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவின் 20-ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில், சென்னைப் பல்கலைக்கழகத்தில் 2018ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட 22 பேராசிர்களின் நியமனம் குறித்து உயர்நீதிமன்ற ஆணையின்படி விசாரணைக்குழு அமைக்கப்பட வேண்டும்.
ஆட்சி மன்ற குழு உறுப்பினர் பேராசிரியர் முருகன் தரக்குறைவாகவும் மிரட்டும் வகையில் பேசிய சென்னைப் பல்கலைக்கழக பதிவாளரை இக்கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கிறது. ஏற்கனவே மூத்த துணைப் பதிவாளர் பதவியை உடனடியாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பதவி உயர்வு பெற்ற துணைப் பதிவாளர்கள் மற்றும் பிரிவு அலுவலர்களுக்கு வழங்கப்பட் ஆணைகளை உடனே வழங்கிட வேண்டும்." இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை பல்கலைக்கழகத்தின் 166வது பட்டமளிப்பு விழா இம்மாத இறுதியில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.