ETV Bharat / state

அவுட்சோர்சிங் முறையில் பணி நியமனம் குறித்து அண்ணா பல்கலைகழகம் புதிய விளக்கம்!

அண்ணா பல்கலைக் கழகத்தில் ஆசிரியர் அல்லாத பணியாளர்களை தினக்கூலி அல்லது தொகுப்பூதியம் அடிப்படையில் அவுட்சோர்சிங் முறையில் நியமிக்கப்படுவர் எனவும், ஆசிரியர் பணியிடங்களில் அவுட்சோர்சிங் முறையில் நிரப்பப்படாது என பதிவாளர் அறிவித்துள்ளார்.

அண்ணா பல்கலைக் கழகம் கோப்புப் படம்
அண்ணா பல்கலைக் கழகம் கோப்புப் படம் (Credits- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 6 hours ago

சென்னை: அண்ணா பல்கலைக் கழகத்தின் ஆட்சிமன்றக்குழுவின் முடிவில் கடந்த நவம்பர் 20ஆம் தேதி அண்ணாப் பல்கலைக் கழக பதிவாளர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், இனி வரும் காலங்களில் ஆசிரியர்கள் அல்லது ஆசிரியர் அல்லாத பணியாளர்களை தினக்கூலி/ மதிப்பூதிய அடிப்படையில் நியமிக்க வேண்டும் என அறிவித்திருந்தார். அதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனம் எழுந்த நிலையில் அண்ணாப் பல்கலைக் கழகத்தின் பதிவாளர் பிரகாஷ் நேற்று (நவம்பர் 21) திருத்திய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதன்படி, "அண்ணா பல்கலைக் கழகத்தின் ஆட்சிமன்றக்குழுவின் கூட்டம் 272ன் ஒப்புதல் அடிப்படையிலும், நிதித்துறையின் ஒப்புதல் அடிப்படையிலும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களை தினக்கூலி அல்லது தொகுப்பூதிய அடிப்படையில் நியமனம் செய்யப்படுவார்கள்.

இதையும் படிங்க: யானைகளை காக்கும் ஏ.ஐ. கேமராக்கள்... தமிழக வனத்துறையின் புதிய முயற்சியால் ரயில் விபத்தில் விலங்குகள் உயிரிழப்புக்கு முற்றுப்புள்ளி!

ஆசிரியர் அல்லாத பணியிடங்களில் இனிமேல் ஏற்படும் காலியிடங்கள் தினக்கூலி அல்லது தொகுப்பூதிய அடிப்படையில் மனிதவள மேலாண்மை நிறுவனத்தின் மூலம் நிரப்படும். மேலும் துறைகளில் நடைபெறும் திட்டப் பணிகளுக்கு ஆட்களை தினக்கூலி அல்லது தொகுப்பூதிய அடிப்படையில் தேர்வுச் செய்யப்படும் போது, திட்டப்பணிகள் முடிந்தப் பின்னர நீடிப்பு வழங்கப்படாது.

துறைகளில் அதிகமாக உள்ள பணியாளர்களை பதிவாளரிடம் கூறிவிட்டு, வேறுத்துறைக்கு மாற்ற வேண்டும். அண்ணா பல்கலைக் கழகத்தின் தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலகம் உள்ளிட்ட ரகசியம் காக்கப்பட வேண்டிய இடங்களுக்கு அவுட்சோர்சிங் முறையில் பணியாளர்கள் நியமனம் செய்யப்படமாட்டார்கள்,"என தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.