ETV Bharat / state

“மூன்றாம் பாலினத்தவர் என்பதற்காக விண்ணப்பத்தை நிராகரிக்கக்கூடாது” - சென்னை உயர் நீதிமன்றம் - Veterinary courses memorandum

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 17, 2024, 12:56 PM IST

மூன்றாம் பாலினத்தவர் என்ற காரணத்துக்காக கால்நடை மருத்துவம் படிக்க விண்ணப்பித்தவரின் விண்ணப்பத்தை நிராகரிக்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோப்புப்படங்கள்
கோப்புப்படங்கள் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: நடப்பு 2024-25ஆம் கல்வியாண்டுக்கான கால்நடை மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை குறித்த விளக்க குறிப்பேட்டில், மூன்றாம் பாலினத்தவர்களை சிறப்பு பிரிவாக வகைப்படுத்தவில்லை எனக் கூறி, நிவேதா என்ற மூன்றாம் பாலித்தனவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், கால்நடை மருத்துவப் படிப்புக்கான விளக்க குறிப்பேட்டை ரத்து செய்து, மூன்றாம் பாலினத்தவர்களுக்கான சிறப்பு பிரிவில் மாணவர் சேர்க்கை வழங்க உத்தரவிடக் கோரப்பட்டிருந்தது. இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

இதையும் படிங்க: மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம் - அரசிடம் விளக்கம் கேட்ட நீதிமன்றம்!

அப்போது மனுதாரர் தரப்பில், கால்நடை மருத்துவப் படிப்பில் மாணவர் சேர்க்கை கோரி சமர்ப்பித்த விண்ணப்பத்தை பரிசீலிக்க உத்தரவிட்ட வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கு தமிழ்நாடு மாணவர் சேர்க்கை குழு தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்படவில்லை.

பின்னர், இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மனுதாரரின் விண்ணப்பத்தை இரு வாரங்களில் பரிசீலிக்க வேண்டும் என மாணவர் சேர்க்கை குழுவுக்கு உத்தரவிட்டார். மேலும், மூன்றாம் பாலினத்தவர் என்ற காரணத்துக்காக மனுதாரரின் விண்ணப்பத்தை நிராகரிக்கக் கூடாது என மாணவர் சேர்க்கை குழுவுக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை முடித்து வைத்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.