கோயம்புத்தூர்:கோவை அம்மன் குளம் பகுதியைச் சேர்ந்தவர் மீனா குமாரி. இவர் கடந்த 2010ம் ஆண்டு முதல் தொடர்ந்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா(PM AWAS YOJANA) திட்டத்திற்கு பதிவு செய்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 2018ம் ஆண்டு வினோத் என்பவர் பாஜகவில் உறுப்பினாராக உள்ளதாக கூறி, வீடு வாங்கி தருவதாக மீனா குமாரியிடம் இருந்து ஒரு லட்சம் ரூபாய் பெற்றுள்ளார்.
அதே போல, பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடுகள் வாங்கி தருகிறேன் என்று கூறியும் பல பேரிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், வீடு வாங்கி தருவதாக கூறி மோசடி செய்தவரிடம் இருந்து பணத்தை மீட்டு தரக் கோரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மீனா குமாரி மற்றும் இரு பெண்கள் புகார் மனு அளித்தனர்.
இது குறித்து பாதிக்கப்பட்ட மீனாகுமார் மற்றும் அப்பெண்கள் கூறுகையில், "தாங்கள் வாடகை வீட்டில் இருப்பதால் எங்கேனும் அரசு குடிசை மாற்று வாரிய வீடு கிடைக்குமா என்று பார்த்து கொண்டிருந்தோம். அப்போது, வினோத் தன்னை பாஜகவில் இருக்கிறேன் என்று கூறி அறிமுகமானார். பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடுகள் ஒதுக்கீடு செய்து தருகிறேன் என்று கூறினார்.