தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழகத்தில் கணிசமாக உயர்ந்த காற்றாலை மின் உற்பத்தி.. 4000 மெகாவாட்டை எட்டியதாக தகவல்! - Wind turbines generation - WIND TURBINES GENERATION

Wind turbines generation: தென் மேற்கு பருவக்காற்றால் தமிழகத்தில் காற்றின் வேகம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், ஒரு மாதத்திற்கு பிறகு காற்றாலை மின் உற்பத்தில் 4000 மெகாவாட்டாக உயர்ந்துள்ளது.

காற்றாலை
காற்றாலை (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 15, 2024, 12:48 PM IST

திருநெல்வேலி:தமிழகத்தில் மின் தேவையை பூர்த்தி செய்வதில் காற்றாலை மின் உற்பத்தி முக்கிய பங்கு வகிக்கிறது. தமிழகத்தின் மின் தேவை நாள் ஒன்றிற்கு 21 ஆயிரம் மெகாவாட்டிற்கும் அதிகமாக உள்ளது. காற்று சீசன் காலங்களில் காற்றாலை மின் உற்பத்தி ஓரளவிற்கு கை கொடுக்கிறது.

தமிழகத்தில் மே மாதம் முதல் அக்டோபர் வரை தென்மேற்கு பருவக்காற்று சீசன். இந்த காலக்கட்டத்தில் 5 ஆயிரம் மெகாவாட் வரை காற்றாலை மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். இந்நிலையில், தமிழகத்தில் 13 ஆயிரத்திற்கும் அதிகமான காற்றாலைகள் உள்ள நிலையில், தென் மாவட்டங்களான நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான காற்றலைகள் நிறுவப்பட்டு மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

கடந்த மே மாதம் காற்றாலை சீசன் துவங்கிய நிலையில் நாள் ஒன்றிற்கு 2000 மெகாவாட்டிற்கும் குறைவாகவே மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. தற்போது தென் மேற்கு காற்று பலமாக வீசி வருவதால் காற்றாலை மின் உற்பத்தி கணிசமாக உயர்ந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி தமிழகத்தின் ஒட்டு மொத்த காற்றாலை மின் உற்பத்தி 4 ஆயிரத்து 84 மெகாவாட்டை எட்டியுள்ளது. மேலும் காற்றின் வேகம் கூடும் நிலையில் மின்சார உற்பத்தியும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

கடந்த ஒரு மாதமாக 3000 மெகாவாட்டிற்கும் கீழ் மின் காற்றாலை மின் உற்பத்தி செய்யப்பட்டிருந்த நிலையில், காற்றின் வேகம் தொடர்ந்து அதிகரிப்பு காரணமாக ஒரு மாதத்திற்கு பிறகு மீண்டும் 4000 மெகாவாட்டிற்கு மேல் காற்றாலை மின் உற்பத்தி எட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: "உச்ச நீதிமன்ற உத்தரவை மீறும் கர்நாடக அரசு.. இறுதி முடிவு யார் கையில்?” - அமைச்சர் துரைமுருகன் பதில்! - Minister Duraimurugan

ABOUT THE AUTHOR

...view details