தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெரியாரை இப்போது எதிர்ப்பது ஏன்? சீமான் புது விளக்கம்! - SEEMAN NEW EXPLANATION

பிரபாகரன் உள்ளிட்ட உலகத்தில் யார் பெரியாரை ஏற்றுக் கொண்டாலும் தாம் பெரியாரை ஏற்று கொள்ளவில்லை என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குறிப்பிட்டுள்ளார்.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர் சந்திப்பு
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர் சந்திப்பு (Image credits-Etv Bharat Tamilnadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 10, 2025, 5:05 PM IST

திருச்சி:விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட உலகத்தில் யார் பெரியாரை ஏற்றுக் கொண்டாலும் நான் பெரியாரை ஏற்று கொள்ளமாட்டேன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், "ஈரோடு கிழக்கு இடைதேர்தலில் டெபாசிட் இழந்தது எங்களுக்கு ஒரு பொருட்டல்ல. தேர்தல்களில் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஏற்கனவே டெபாசிட் இழந்த வரலாறு உள்ளது.

ஈரோடு கிழக்குத் தொகுதியில் தேர்தல் ஆணைய அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர், காவல் துறை அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரும் ஆளுங்கட்சிக்கு ஆதரவாகவே செயல்பட்டனர். தேர்தல் முடிவு எங்களுக்கு ஊக்கமளிப்பதாக உள்ளது. பா.ஜ.க வாக்குகள் எங்கள் கட்சிக்கு வந்துள்ளது என கூறுவது தவறானது. பாஜகவும் அதிமுகவும் நாங்கள் வளர வேண்டும் என எப்படி நினைப்பார்கள்?
என்னுடைய கோட்பாட்டின்படி வரும் தேர்தல்களிலும் எங்கள் கட்சி தனித்தே போட்டியிடும். யாருடனும் கூட்டணி இல்லை.

நான் திராவிட கட்சிகளுக்கும், தேசிய கட்சிகளுக்கும் எதிரானவன். என்னை பாஜக முதல்வர் வேட்பாளராக அறிவிக்கும் என கூறுவது யூகம் தான். உலக அளவில் டென்மார்க், நியூசிலாந்து போன்ற பல நாடுகளில் ஊழல், லஞ்சம் இல்லாத நிலை உள்ளது. தமிழ்நாட்டில் காமராஜர், அண்ணா, ராஜாஜி உள்ளிட்டோரின் ஆட்சியில் ஊழல் இல்லாத நிர்வாகம் இருந்தது.

பெரியார் குறித்து நான் அதிகமாகப் பேசிவிட்டேன் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். நான் இப்போதுதான் தொடங்கி இருக்கிறேன். முன்பு பெரியார் ஆதரவு நிலைப்பாட்டில் தான் நான் இருந்தேன். தற்போது ஒரு தெளிவு வந்துள்ளது. பெரியாரின் கொள்கை கொண்டாடப்பட வேண்டிய கொள்கை இல்லை என தெரிந்த பின்பு எதிர்க்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க:வேட்புமனு தாக்கலின் போது கையில் எலுமிச்சை பழம் வைத்திருந்தது ஏன்? சந்திரகுமார் விளக்கம்!

தேர்தலில் போட்டியிட்டாலும் போட்டியிடாவிட்டாலும் கருத்தை கூற ஜனநாயகத்தில் எல்லோருக்கும் உரிமை உண்டு. ஒன்றிய அரசு நிதி தரவில்லை என புலம்புவதற்காக 40 பேரை மக்கள் தேர்தெடுக்கவில்லை. இந்தியாவின் வரி வருவாயை பெருக்குவதில் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது. நான் முதலமைச்சரானால் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கவில்லையென்றால் மாநில‍ அரசின் சார்பில் வரி கொடுக்கமாட்டேன். திமுக அரசிடம் கறை இருப்பதால் தான் ஒன்றிய அரசுடன் சண்டை போட முடியவில்லை.

நிதி இல்லை என கூறுபவர்கள் பல நூறு கோடி ரூபாயை தேர்தலுக்கு செலவழிக்கிறார்கள். பெரியாருக்கு யாரும் வாக்களிக்கவில்லை காந்திக்கு தான் வாக்களித்துள்ளார்கள். எனக்கு தொண்டை சரியில்லாமல் போய் விட்டது இல்லையென்றால் பெரியார் குறித்து இன்னும் அதிகமாக பேசியிருப்பேன். எனக்கு சொந்த பெரியார் ஆயிரம் பேர் இருக்கிறார்கள். எங்கிருந்தோ வந்த பெரியார் எனக்கு தேவையில்லை.

ஈழத்தில் நேதாஜி படம் இருந்தது. எம்ஜிஆர் படம் இருந்தது. ஆனால், அங்கு பெரியார் படம் இல்லை. விடுதலைப்புலிகள் சாக வேண்டும் என நினைத்தது திராவிடம். பிரபாகரன் உள்ளிட்ட உலகமே பெரியாரை ஏற்றுக்கொண்டாலும் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன், அவரை எதிர்ப்பேன். பெரியார் எங்களுக்கு தேவையில்லை, எனக்கு தேவையில்லை. என்னை பின்பற்றுபவர்கள் பெரியார் தான் வேண்டுமென்றால் என்னை விட்டு விலகி செல்லலாம்,"என்றார்.

ABOUT THE AUTHOR

...view details