சென்னை:தமிழகத்தில் நடந்து முடிந்த 18வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. இதில் தமிழ்நாட்டில் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற வாக்காளர் குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
திருவள்ளூர் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் பெற்ற வாக்குகள் 7,96,956 (வித்தியாசம்: 5,72,155):திருவள்ளூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சசிகாந்த் செந்தில் 7,96,956 வாக்குகள் பெற்று பாஜக வேட்பாளரை விட 5,72,155 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இந்த தொகுதியில் இவரை எதிர்த்து போட்டியிட்ட பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த வி.பொன் பாலகணபதி 2,24,801 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார். ஆனால், அவர் டெபாசிட்டை இழந்துள்ளார். மேலும், தேமுதிக வேட்பாளர் நல்லதம்பி 2,23,904 வாக்குகளும் மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 1,20,838 வாக்குகள் பெற்று டெபாசிட்டை இழந்துள்ளனர்.
திண்டுக்கல் சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் பெற்ற வாக்குகள்: 6,70,149 (வித்தியாசம்: 4,43,821):திண்டுக்கல் தொகுதியில் இந்திய (மார்க்சிஸ்ட்) கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சச்சிதானந்தம் 6,70,149 வாக்குகள் பெற்று 4,43,821 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இந்த தொகுதியில் இவரை எதிர்த்து எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்த முஹம்மது முபாரக் 2,26,328 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். மேலும் பாமக கட்சியை சேர்ந்த திலகபாமா 1,12,503 வாக்குகளும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த கயிலைராஜன் 97845 வாக்குகள் பெற்று டெபாசிட்டை இழந்துள்ளனர்.
ஸ்ரீ பெரும்புதூர் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு பெற்ற வாக்குகள்: 7,58,611 (வித்தியாசம்: 4,42,009):ஸ்ரீ பெரும்புதூர் தொகுதியில் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு 7,58,611 வாக்குகள் பெற்று 4,42,009 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இவரை அடுத்து இந்த தொகுதியில் அதிமுக வேட்பாளர் பிரேம்குமார் 2,71,582 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். மேலும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வி என். வேணுகோபால் 2,10,110 வாக்குகளும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த ரவிச்சந்திரன் 1,40,233 வாக்குகளும் பெற்று டெபாசிட்டை இழந்துள்ளனர்.