தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி:விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரனா? விசிகவின் ஆதவ் அர்ஜூனா? போட்டி யாருக்கு? - வெற்றி வேட்பாளர்

Kallakurichi constituency: 2024 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் யார் போட்டியிடப்போவது? எந்த வேட்பாளருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளிட்டவைகள் குறித்து அலசுகிறது இந்த செய்தித் தொகுப்பு.

Kallakurichi Lok Sabha constituency
கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதி

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 19, 2024, 7:51 AM IST

கள்ளக்குறிச்சி:எதிர்வரும் இந்திய மக்களவைத் தேர்தலை பொதுமக்களும், அரசியல் கட்சிகளும் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்துக் கிடக்கின்றனர். இந்தியாவில், 543 மக்களவைத் தொகுதிகள் உள்ள நிலையில், இவற்றில் காங்கிரஸ், பாஜக, கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட தேசிய கட்சிகளின் பங்களிப்பு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.

ஆனாலும் கூட, மாநில கட்சிகளின் உதவி இல்லாமல் இவர்கள் தனித்து இயங்க முடியாது என்பதனை பல ஆண்டுகளாகப் பார்த்து வருகிறோம். அந்த வகையில், வரும் மே மாதத்திற்குள் மக்களவைத் தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டிய அவசியம் தேர்தல் ஆணையத்திற்கு இருந்து வருகிறது.

அரசியல் கட்சிகள், என்ன வாக்குறுதிகள் கொடுத்தால் மக்கள் நமக்கு வாக்களிப்பார்கள் என்பதில் மும்முரமாக இறங்கி, அந்த பணிகளை மேற்கொண்டு வருவதை நாம் அன்றாடம் செய்திகளில் பார்க்க முடிகிறது. அந்த வகையில் இந்த தேர்தலில் யார்? யார்? போட்டியிடப் போகிறார்கள், எந்தெந்த கட்சிகளுக்கு எவ்வளவு தொகுதிகள் ஒதுக்கப்படும் என்கிற கருத்துக்கணிப்புகளும் ஒரு பக்கம் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன.

குறிப்பாக, தமிழகத்தைப் பொறுத்தவரை, முப்பத்து ஒன்பது நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளன. திமுக, அதிமுக என இரு பெரும் திராவிடக் கட்சிகள் தொடர்ந்து தங்களை முன்னிருத்தி வரும் நிலையில், இப்போது பாஜக ஒரு தனி அணியை உருவாக்கி தேர்தல் களத்தை சந்திக்கிறது.

திமுக கூட்டணியில் கம்யூனிஸ்டுகள், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, கொங்கு மக்கள் கட்சி, மக்கள் நீதி மய்யம், முஸ்லிம் லீக், தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியில் உள்ள நிலையில், மேலும் சில கட்சிகளில் சேர்வதற்கு வாய்ப்புள்ளது.

அதேபோன்று அதிமுக கூட்டணியில் புரட்சி பாரதம், தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு, பெருந்தலைவர் மக்கள் கட்சி உள்ளிட்ட ஒரு சில கட்சிகளே அங்கம் வகித்து வந்தாலும் கூட, பாமகவை கூட்டணிக்குள் சேர்ப்பதற்கு அதிமுக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால், பாமகவின் நிலைப்பாடோ 'மதில்மேல் பூனை'-யாகவே இருந்து வருகிறது. ஒருபக்கம் பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது; மற்றொரு பக்கம் அதிமுக உடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

பாமக எந்த அணியில் இணையப் போகிறது என்பதைப் பொறுத்துதான், அதிமுக கூட்டணி இறுதி செய்யப்படும். திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகளுக்கு போதிய இடங்கள் ஒதுக்கப்படாவிடில், விடுதலை சிறுத்தைகள் கட்சி அதிமுகவுடன் இணைவதற்கு அதிக வாய்ப்புள்ளது. மேலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி அதிமுகவுடன் இணையுமானால், பாமக பாஜகவுடன்தான் போட்டியிடும் என்பதை மறுக்க முடியாது.

கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி:வடதமிழகத்தில் சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது, கள்ளக்குறிச்சி. விவசாயம், குச்சி வள்ளி கிழங்கில் மாவு தயாரித்து, அதன் மூலம் ஜவ்வரிசி உற்பத்தி செய்யும் சேகோ தொழிற்சாலைகள், சுற்றுலா தலமான ஏற்காடு, பழங்குடியினர் வாழும் கல்வராயன் மலை என கலவையான சமூக, பொருளாதார, நிலவியல் முகம் கொண்டது, கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி.

அதைப்போல, தொகுதியில் உள்ள ஆறு சட்டமன்றப் பிரிவுகளில் கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், ரிஷிவந்தியம் ஆகிய மூன்றும் கள்ளகுறிச்சி மாவட்டத்தில் உள்ளன. ஆத்தூர், கெங்கவல்லி, ஏற்காடு ஆகிய மூன்று சட்டமன்றப் பிரிவுகளும் சேலம் மாவட்டத்தில் உள்ளன. இங்கு கடந்த முறை திமுக அணியின் சார்பில் முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன் பொன்.கௌதமசிகாமணி போட்டியிட்டார்.

அதிமுக அணியின் சார்பில் விஜயகாந்த்தின் மைத்துனர் சுதீஷ் போட்டியிட்டார். இந்நிலையில், திமுகவை சேர்ந்த பொன்.கௌதமசிகாமணி கள்ளக்குறிச்சி தொகுதியில் வெற்றி பெற்றார். இந்த முறை மீண்டும் இவர் திமுக சார்பில் போட்டியிடுவார் எனத் தெரிகிறது. ஆனாலும், தொகுதியில் அவருக்கு செல்வாக்கில்லை என அப்பகுதியினரால் கூறப்படுகிறது.

மேலும், திமுகவில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக இருந்த அங்கயற்கண்ணியும் போட்டியிடப்போவதாக பேசப்படுகிறது. இவருக்கு கனிமொழியின் ஆதரவு உண்டு. இந்த நிலையில், இதற்கு முன்னர் இதே தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த மவுண்ட் பார்க் மணிமாறனும் போட்டியிட வாய்ப்புள்ளதாக பேசப்படுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு லாட்டரி அதிபராக இருந்த பிரபல தொழிலதிபர் கோவை மார்ட்டினின் மருமகன் ஆதவ் அர்ஜூன் சமீபத்தில் திருச்சியில் நடைபெற்ற விசிக மாநாட்டில் திருமாவளவன் தலைமையில் அக்கட்சியில் சேர்ந்தார். அதைத்தொடர்ந்து, அவருக்கு விசிக-வில் முக்கியத்துவமான துணை பொதுச் செயலாளர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், விசிக ஒரு பொதுத் தொகுதியைக் கேட்டுள்ளது. அந்தவகையில், இவரும் போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாஜக கூட்டணியில் தேமுதிக சேரும் நிலையில், விஜயகாந்த் மைத்துனர் சுதீஸும் அல்லது விஜயகாந்தின் மூத்த மகனான விஜய பிரபாகரன் போட்டியிடலாம் எனப் பேசப்படுகிறது. அதேபோன்று, இந்திய ஜனநாயக கட்சி சார்பில் ரவி பச்சமுத்துவும் இந்த தொகுதியின் மீது ஒரு கண் வைத்துள்ளார். அதிமுக சார்பில் மீண்டும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் காமராஜ் போட்டியிடுவார் எனத் தெரிகிறது. இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் சார்பில் இன்னும் யாரும் உறுதியாகவில்லை.

இதையும் படிங்க:தமிழ்நாடு பட்ஜெட் நாளை தாக்கல்; நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட்!

ABOUT THE AUTHOR

...view details