சென்னை:இது தொடர்பாகஅரசுத் தேர்வுத்துறை இயக்குனர் சேதுராமவர்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மூலம் மே. 17ஆம் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் பட்டியலை பெற்றுக் கொள்ளலாம்.
மேலும், https://dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பள்ளி மாணவர்களும், தனித்தேர்வர்களும் தங்களின் பதிவு எண், பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து மதிப்பெண் பட்டியல்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் விடைத்தாள் நகல், மறுகூட்டலுக்கு விண்ணப்பம் செய்ய விரும்பினால், பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளியின் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும் மே 15ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம்.
விடைத்தாள் நகல், மறுகூட்டல் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றிக்கு மட்டுமே தேர்வர்கள் விண்ணப்பிக்க முடியும். எனவே, தேர்வர்கள் விடைத்தாள் நகல் அல்லது மறுகூட்டல் இதில் எது வேண்டும் என்பதை தெளிவான முடிவு செய்து கொண்டு, அதன் பின்னர் விண்ணப்பிக்க வேண்டும். விடைத்தாள் நகல் பெற்றவர்கள் மட்டுமே விடைத்தாள் மறுமதிப்பீடு கேட்டு, பின்னர் விண்ணப்பிக்க இயலும்.