தூத்துக்குடி: தூத்துக்குடி, புதூர் பாண்டியாபுரம் பகுதியில் மீன்களை பதப்படுத்தி வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் தனியார் நிலா சீ புட்ஸ் (Nila Sea Foods) நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த சுமார் 500 தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு சுமார் 11 மணியளவில் அந்த ஆலையில் ஏற்பட்ட மின் விபத்தில் அமோனியா கசிவு ஏற்பட்டதாகவும், இதனால் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 16 பெண்கள் உட்பட 29 பெண்கள் மயங்கிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது.
பின்னர், சம்பவ இடத்தில் தூத்துக்குடி சிப்காட் போலீசார் மற்றும் தீயணைப்பு துறை வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, தீயணைப்பு வீரர் ஒருவரும் மயக்கமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனிடையே, நிலா சீ புட்ஸ் தொழிற்சாலையின் மேலாளர் வேல்முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "வழக்கமாக ஆலையில் பகல், இரவு என 2 நேர ஷிப்ட் நடக்கும். இதில் இரவு நேரத்தில் பணியில் வேலைக்காக இருந்தவர்கள் உணவு அருந்த சென்ற நிலையில், ஏசியின் வயரில் மின் கசிவு ஏற்பட்டது.