தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"தருமபுரி தொகுதியில் இன்னும் அதிகமாக உழைக்க வேண்டும்".. தோல்வி குறித்து செளமியா அன்புமணி! - LOK SABHA ELECTION results 2024 - LOK SABHA ELECTION RESULTS 2024

Sowmiya Anbumani: தருமபுரி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட செளமியா அன்புமணி அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஆ.மணியிடம் 21,300 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

சவுமியா அன்புமணி செய்தியாளர் சந்திப்பு
சவுமியா அன்புமணி செய்தியாளர் சந்திப்பு (Credit - Etv Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 4, 2024, 9:06 PM IST

தருமபுரி:நாட்டின் 18வது மக்களவைத் தேர்தல், ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. இதனையடுத்து, ஜூன் 4ஆம் தேதி இன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் தருமபுரி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட சௌமியா அன்புமணி அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஆ.மணி 21,300 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியது முதலே முன்னிலை வகித்து வந்த சவுமியா, கடைசி சுற்றில் பின்னடைவைச் சந்தித்தால் தோல்வியைத் தழுவினார்.

இதனை அடுத்து செட்டிகரையில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய சௌமியா அன்புமணி,"தேர்தல் முடிவுகள் தெரிந்துள்ளது வெற்றி வாய்ப்பை இழந்து இருக்கின்றோம். பாமக சார்பாக போட்டியிட வாய்ப்பு அளித்த மருத்துவர் ராமதாஸ் அவர்களுக்கு நன்றி.

என்னுடன் தேர்தல் பணியில் ஈடுபட்ட கூட்டணி கட்சியினர் மற்றும் பாமக கட்சியினர் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. தருமபுரி நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் ஆ.மணிக்கு என்னுடைய வாழ்த்துகள் என்றார்.

இந்த தோல்வியானது மக்களுக்கு இன்னும் அதிகமாக பணியாற்ற வேண்டும் என்பதை சொல்லிக் கொடுக்கிறது. தருமபுரி தொகுதியில் இன்னும் அதிகமாக உழைக்க வேண்டும் என்று நினைக்கிறேன். வாய்ப்பு கிடைத்திருந்தால் நிறைய நல்ல திட்டங்களை கொண்டு வந்திருப்பேன்.

தருமபுரி மக்களுக்காக எனது உழைப்பு என்றும் இருக்கும். தருமபுரியை நான் தாய் வீடாகத்தான் பார்க்கிறேன். வெற்றி பெற்றவர்கள் எத்தனையோ வாக்குறுதிகளை அளித்து இருக்கிறார்கள். அதேபோல் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.

அதுதான் நியாயம், தர்மபுரி தொகுதிக்கு தண்ணீர் கொண்டு வருகிறேன் என்று வாக்குறுதி கொடுத்திருக்கிறார்கள். அந்த வாக்குறுதியை நிச்சயம் நிறைவேற்ற வேண்டும். குடிப்பதற்கும், விவசாயத்திற்குத் தண்ணீர் தேவை.

மேடைக்கு மேடை வேலையில்லாதா இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்து தருகிறோம் போன்ற பல்வேறு வாக்குறுதிகளை சொல்லிவிட்டு சென்றார்கள் அவை அனைத்தையும் நிறைவேற்றம் வேண்டும் என்றார். இந்த நிகழ்வின் போது அருகிலிருந்த மேட்டூர் எம்.ஏல்.ஏ சதாசிவம் கண்கலங்கினார், இதனையடுத்து அருகில் இருந்த சக கட்சி உறுப்பினர்கள் அவரை சமாதானப்படுத்தினர்.

இதையும் படிங்க:"பாஜகவின் பண பலம் எடுபடவில்லை" - மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்!

ABOUT THE AUTHOR

...view details