விழுப்புரம்: அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம்(OMCL) தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனமாக பொது மற்றும் மறுவாழ்வுத்துறையின் நிர்வாகக் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இந்நிறுவனம் சார்பாக 11062 திறன் மற்றும் திறனற்ற தொழில்முறை பணியாளர்கள் ஆஸ்திரேலியா, பக்ரைன், கனடா, குவைத், ஓமன், சவுதி அரேபியா, லிபியா போன்ற நாடுகளில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
மேலும், 5500ற்கும் மேற்பட்ட மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த பணியாளர்கள் சவதி அரேபியாவின் சுகாதார அமைச்சகத்திலும் மற்றும் அதிக அளவிலான வீட்டு பணியாளர்களை பணியமர்த்தப்பட்டுள்ளனர். குவைத், ஜப்பான், ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளில் பணிபுரிய விரும்பும் செவிலியர்கள் அயல்மொழித் தேர்வில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.
எனவே, அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தால் ஜப்பான் மற்றும் ஜெர்மனி மொழிகளுக்கான இலவச அயல் மொழிப்பயிற்சி வகுப்புகள் நடத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட இலவச அயல் மொழிப்பயிற்சி வகுப்புகளில் சேர விருப்பம் உள்ள செவிலியர்கள் உடன் கீழ்கண்ட சமூக வலைதலங்களில் அல்லது தொலைபேசி எண்கள் வழியாகவோ தொடர்பு கொண்டு தங்களின் பெயர்களை பதிவு செய்து கொள்ளவும்.
1)(WhatsApp Number) 6379179200