சென்னை: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏவாக இருந்த திமுகவின் நா.புகழேந்தி உடல்நலக்குறைவால் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால், விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு, அங்கு ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்த தேர்தலில், திமுக கூட்டணி சார்பில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் பாமக வேட்பாளர் சி.அன்புமணி களமிறங்கியுள்ளார். நாம் தமிழர் கட்சி சார்பாக, அபிநயா போட்டியிடுகிறார்.
இந்நிலையில், விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் தற்போதைய நிலவரம் என்ன என்பது குறித்தும், தேர்தலில் இங்கு எந்தக் கட்சி வெற்றிப்பெற வாய்ப்புள்ளது என்பது பற்றியும் ஜூலை 3,4,5 ஆகிய தேதிகளில், இத்தொகுதிக்குட்பட்ட 90 இடங்களில், 1,360 வாக்காளர்களிடம் பேராசிரியர் டாக்டர் ச.ராஜநாயகம் கருத்துக்கணிப்பு மேற்கொண்டுள்ளார். அங்கு சேகரித்த தரவுகள் தொடர்பான விவரங்களை இன்று (திங்கட்கிழமை) சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்கள் மத்தியில் வெளியிட்டார்.
இந்த கருத்துக்கணிப்பில்,"தமிழகத்தின் ஒட்டுமொத்தக் கவனத்தின் குவியமாகத் திகழும் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் களத்தில், மாநில அளவில் பிரதான கட்சிகளில் ஒன்றாகிய அஇஅதிமுக இடைத்தேர்தலைப் புறக்கணித்திருக்கிறது. இதுவரை இடைத்தேர்தல் முறையை விமர்சித்து வந்த பாட்டாளி மக்கள் கட்சி, தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் களமிறங்கியுள்ளது. கள்ளச் சாராய மரணங்கள் உள்ளிட்ட சங்கடங்களுக்கு இடையே தொகுதியைத் தக்கவைக்கத் திராவிட முன்னேற்றக் கழகம் போரில் குதித்துள்ளது.
விக்கிரவாண்டி வாக்காளரிடையே கட்சிகளுக்கு வெளிப்படும் ஆதரவு:விக்கிரவாண்டி தொகுதி மக்களிடம் மேற்கொண்ட கருத்துக்கணிப்பில், திமுக 56.6 சதவிகிதமும், பாமகவுக்கு 37.5 சதவிகிதமும், நாம் தமிழர் கட்சிக்கு 4.0 சதவிகிதமும், பிற வேட்பாளர்கள் 0.4 சதவிகிதம் மற்றும் முடிவு செய்யாதோர் 1.5 சதவிகிதம் வாக்குகள் கிடைக்கும் என கண்டறியப்பட்டுள்ளது.
அதிமுக வாக்கு பிரியும் விதம்: 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக-விற்கு வாக்களித்ததாகக்
கூறுவோரில் (மொத்த சாம்பிளில் 24.6 சதவிகிதம் ) பாதிக்கும் மேற்பட்டோர் பாமக-விற்கு வாக்களிக்கின்றனர்.
அந்த வகையில், பாமகவிற்கு 52.2 சதவிகிதமும், திமுகவுக்கு 37.3 சதவிகிதம், நாம் தமிழர் கட்சி 6.0, பிற வேட்பாளர்கள் 1.5 சதவிகிதம் மற்றும் முடிவுசெய்யாதோர் 3.0 சதவிகிதமாகும்.
வகுப்பு ரீதியாக:மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வாக்கு மிகக் கணிசமாக பாமக-விற்கும், பட்டியலின
மற்றும் பிற்படுத்தப்பட்டோர் வாக்கு பெரும்பாலும் திமுக-விற்கும் செல்கின்றன.
வகுப்பு | பாமக வாக்கு சதவிகிதம் | திமுக சதவிகிதம் | நாதக சதவிகிதம் |
பட்டியலினத்தவர் | 10.0 | 76.7 | 10 |
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் | 54.3 | 42.1 | 1.8 |
பிற்படுத்தப்பட்டோர் | 15.2 | 80.4 | 4.4 |
பாலின ரீதியாக:ஆண்களும் (மொத்த சாம்பிளில் 61.4சதவிகிதம் ) பெண்களும் (மொத்த சாம்பிளில் 38.2சதவிகிதம் ) வாக்களிக்கும் விதத்தில் குறிப்பிடத்தக்க வேறுபாடு வெளிப்படுகிறது.
கட்சிகள் | ஆண்கள் | பெண்கள் |
பாமக | 40.1 சதவீதம் | 33.7 சதவீதம் |
திமுக | 53.3 | 61.5 |
நாதக | 4.2 | 3.8 |
வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் ஆட்சிக்கு வரக்கூடிய கட்சி மற்றும் முதல்வர் குறித்து விக்கிரவாண்டி வாக்காளரின் அனுமானம் (முதல் ஐந்து இடங்கள்)