திருப்பத்தூர்:கடந்த 20 வருடங்களுக்கு முன்பு தரணி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வெளியான கில்லி திரைப்படம், இன்று மீண்டும் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு திரையரங்குகளில் மறு வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், திருப்பத்தூர் அடுத்த ஜடையனூர் பகுதியைச் சேர்ந்த சுந்தர்ராஜ் மகன் கதிர் (30) என்பவர், நடிகர் விஜயின் தீவிர ரசிகர் ஆவார்.
இவர் கேரள மாநிலம் பாலக்காடு பகுதியில் இயங்கி வரும் யுனிவர்சல் அச்சீவர் புக் ஆப் ரெக்கார்ட் (Universal Achiever Book of Record) உலக சாதனை நிறுவனம் மற்றும் ஃபியூச்சர் கலாம் புக் ஆப் ரெக்கார்ட் (Future Kalam Book of Record) தனியார் நிறுவனத்தின் மாநிலத் தலைவர் பாலசுப்பிரமணி முன்னிலையில், கடந்த 16ஆம் தேதி காலை 11 மணிக்குத் துவங்கி மறுநாள் 17ஆம் தேதி இரவு 11 மணி வரை, மொத்தம் 36 மணி நேரத்தில் விஜய் பற்றிய 10 ஆயிரம் வரிகள் அடங்கிய ஒரு முழுக் கவிதை எழுதி உலக சாதனை படைத்துள்ளார்.