கோயம்புத்தூர்: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய், கடந்த பிப்ரவரியில் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார். 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலே தனது இலக்கு என்பதில் தெளிவாக இருந்த விஜய், மக்களவை மற்றும் இரண்டு இடைத்தேர்தலிகளிலும் பங்கேற்காமல் இருந்தார்.
இந்த நிலையில், இன்று சென்னை பனையூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. சுமார் 200க்கும் மேற்பட்ட தவெக நிர்வாகிகள் மட்டுமே பங்கேற்ற இந்த விழாவில் கட்சியின் கொடியை அறிமுகப்படுத்திய விஜய், கட்சி பாடலையும் வெளியிட்டார்.
மேலும், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு எப்போது நடைபெறும், தவெகவின் கொள்கைகள் மற்றும் செயல் திட்டங்கள் என்னவென்பது குறித்து உரிய நேரத்தில் அறிவிப்பேன் எனவும் விஜய் கூறினார். மேலும், விஜய் வந்த கார் தற்போது சர்ச்சையில் சிக்கி உள்ளது.
இவ்வாறு இந்நிகழ்ச்சிக்கு விஜய் TN 37 DR 1111 என்ற பதிவு எண் கொண்ட இனோவா காரில் வந்திருந்தார். இந்த வாகனம் கோவை தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனம் ஆகும். மேலும், இந்த வாகனம் சென்னையில் இயக்கப்பட்டு வரும் நிலையில், இந்த வாகனம் மீது 4 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் நிலுவையில் இருப்பதாக தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.
மேலும், இது தொடர்பாக பரிவாகன் செயலியில் இந்த கார் குறித்து ஆய்வு செய்த போது, இதுவரை 4,700 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு 200 ரூபாய் மட்டுமே அபராதம் செலுத்தப்பட்டு, 4,500 ரூபாய் அபராதம் நிலுவையில் உள்ளது என்பதும், மேலும் மாசு கட்டுப்பாட்டு வாரிய தரச் சான்றிதழ் தேதியும் கடந்த ஆண்டு மே மாதமே முடிந்து விட்டதாகவும் Screen Record ஒன்று வைரலாக பரவி வருகிறது.
இதையும் படிங்க:வாகைப்பூவுக்கு அதிகரிக்கும் மவுசு.. விஜய்க்கு வெற்றி வாகை சூடுமா வாகைப்பூ? தவெக கொடியின் மூலம் தெரிவிப்பது என்ன?