சென்னை: சென்னை மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுவன் உயர் படிப்பிற்காக வெளிநாடு செல்ல விசா பெறுவதற்கு, மருத்துவச் சான்றிதழ் தேவைக்காக அரும்பாக்கத்தில் உள்ள தனியார் ரத்தப் பரிசோதனை மையத்தில் ரத்தம் பரிசோதனை செய்துள்ளார். பரிசோதனை முடிவில் சிறுவனுக்கு ஹெச்ஐவி பாசிடிவ் என ரிப்போட் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் மன உளைச்சலில் சொந்த ஊரனா செங்கல்பட்டு சென்றுள்ளனர்.
வழக்கறிஞர் கார்த்தி பேட்டி (Credits: ETV Bharat Tamil Nadu) அங்குள்ள தனியார் ரத்தப் பரிசோதனை மையத்தில் மீண்டும் ரத்தத்தை பரிசோதனை செய்ததில் ஹெச்ஐவி நெகட்டிவ் என ரிப்போட் வந்துள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுவனின் பெற்றோர் தங்களின் குடும்ப வழக்கறிஞரும், நடிகருமான கராத்தே கார்த்தியிடம் கூறியுள்ளனர்.
பின்னர் ரிசல்ட் குறித்து கராத்தே கார்த்தி அரும்பாக்கம் தனியார் பரிசோதனை மையத்தை தெராடர்பு கொண்டு கேட்ட போது அலட்சியமாக பதில் அளித்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் பரிசோதனை மையம் சார்பில் ஊழியர் ஒருவர் கராத்தே கார்த்தியை செல்போனில் அழைத்து, மன்னித்து விடுங்கள் கம்ப்யூட்டர் சாப்ட்வேர் பிரச்னையால் 100இல் 1 இது போன்று தவறான ரிசல்ட் வரும் என கூறியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து கராத்தே கார்த்தி மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சிறுவனின் பெற்றோருக்கு பெரும் மன உளைச்சல் ஏற்படுத்திய தனியார் பரிசோதனை மையம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோரிக்கை வைத்தார். கராத்தே கார்த்தி ஜெயிலர், கைதி, டாக்டர் போன்ற படங்களில் துணை நடிகராகவும், வில்லனாகவும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:மாடு முட்டியதில் அரசு பேருந்து சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த நீதிமன்ற ஊழியர்.. பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்! - road accident by stray cow