வேலூர்:வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு காயிதே மில்லத் நகரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் அன்வர் பாஷா (55) என்பவரது மனைவி மும்தாஜ் (48), இவர்களது மகன் இம்ரான் (26). இவர்கள் குடும்ப சூழ்நிலை காரணமாக தனியார் வங்கி மூலம் கடன் பெற்றதாகவும், கடனின் தவணைத் தொகையைச் செலுத்திவதில் காலதாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் தனியார் வங்கி ஊழியர்கள் கடனை திரும்பச் செலுத்தும்படி தொந்தரவு செய்ததாகவும், அதனால் மும்தாஜ் மற்றும் அவரது மகன் இம்ரான் மனஉளைச்சலுக்கு ஆளானதாக கூறப்பட்ட நிலையில், தாயும் மகனும் நேற்று முன்தினம் (ஜூலை 6) தற்கொலை செய்து கொண்டனர்.