வேலூர்:சமூக வலைதளங்களில் ரீல்ஸ் வீடியோக்களை பதிவிடுவது இன்றைய இளைஞர்களுக்கு மிக பிடித்த பொழுதுபோக்கு அம்சமாக மாறியுள்ளது. நின்றால் ரீல்ஸ், நடந்தால் ரீல்ஸ், தூங்கினால் ரீல்ஸ் என அன்றாட நடவடிக்கைகளை ஆடல், பாடல் என குதுகலமாக பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் வேலூரை சேர்ந்த இளைஞர் ஒருவர் பெண் வேடமிட்டு நவீன மோட்டார் பைக்கில் வேலூர் நகரில் வலம் வருவது போல் ரீலிஸ் ஒன்றை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அந்த ரீல்ஸில் இளைஞர் ஒருவர் பெண் போல் சேலை உடுத்தி, தலையில் பூ வைத்து அலங்காரம் செய்து கொண்டு. ஒய்யாரமாக பைக்கில் அமர்ந்து கல்லூரிகள், பேருந்து நிலையம் என முக்கிய சாலைகளில் அதிவேகமாக ஹெல்மெட் அணியாமல் பயணிகிறார்.