சென்னை:சென்னை பெரம்பூர் பகுதியில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை 8 பேர் கொண்ட கும்பல் வெட்டி படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று மாலைக்குள் ஆம்ஸ்ட்ராங் உடல் அடக்கம் செய்யப்படவுள்ள நிலையில், சென்னை பெரம்பூரில் அவரது உடல், கட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு பகுஜன் சமாஜ் கட்சி தேசியத் தலைவர் மாயாவதி நேரில் அஞ்சலி செலுத்தினார். அதனை தொடர்ந்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பிறகு உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், "பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கு வீர வணக்கம் செலுத்துகின்றேன். அவருடைய இறப்பு நமக்கு பெரும் துயரத்தை அளித்துள்ளது. இந்த படுகொலை வன்மையாக கண்டிக்கத்தக்கது. அரசியல் கட்சி தலைவரை படுகொலை செய்திருப்பது மிகவும் கண்டனத்துக்குரியது.