தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விஜயுடன் கூட்டணியா? விளக்கம் அளித்த திருமாவளவன்!

தவெக மாநாட்டிற்கு முன் விஜய்க்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. தற்போது இந்த நிகழ்ச்சியில் விஜய் பங்கேற்கும் பட்சத்தில், அரசியல் சூழலை கருத்தில் கொண்டு நிர்வாகிகளுடன் பேசி நான் பங்கேற்பது தொடர்பாக முடிவெடுக்கப்படும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

விஜய், திருமாவளவன்
விஜய், திருமாவளவன் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 5, 2024, 2:01 PM IST

திருச்சி: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன், சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வந்தார். அப்போது திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து திருமாவளவன் பேசியதாவது, “பஞ்சமி நிலம் தொடர்பாக பிரச்னை இருக்கிறது. கருணாநிதி தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு மீண்டும் இயங்க வேண்டும் என்பது தெரிவித்துள்ளோம்.

கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறோம். தமிழகத்தில் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் மாவட்டச் செயலாளர் நியமிக்க முடிவு எடுத்துள்ளோம். கட்சி பலப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில், பொறுப்பாளர்கள் நியமனம் செய்ய முடிவு எடுத்துள்ளோம். கூட்டணி தொடர்பாக பேசுவதற்கு எந்தத் தேவையும் எழவில்லை. நாங்கள் ஏழு ஆண்டுகளாக தொடர்ந்து திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் இருந்து வருகிறோம்.

2026 சட்டமன்றத் தேர்தல் கூட்டணி: அகில இந்திய அளவில் இந்தியா கூட்டணியில் ஒரு அங்கமாக உள்ளோம். 2 கூட்டணிகளை உருவாக்கியதில் விடுதலை சிறுத்தைகளுக்கு பங்கு உண்டு. நாங்கள் உருவாக்கிய கூட்டணிகளை மேலும் பலப்படுத்த வேண்டும். இந்த கூட்டணிகளை விட்டுவிட்டு, இன்னொரு கூட்டணிக்குச் செல்ல வேண்டும் என்ற தேவையில்லை. ஏற்கனவே பலமுறை நான் சுட்டிக்காட்டி உள்ளேன்.

திட்டமிட்டு விடுதலை சிறுத்தைகள் மீது சந்தேகத்தை ஏற்படுத்துகிற முயற்சியில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். நம்பகத்தன்மையை மேற்கொள்ள முயற்சிக்கின்றனர். இதை நான் முற்றிலுமாக மறுக்கிறேன். 2026ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தொகுதியில் திமுகவுடன் கூட்டணி தொடரும். இனி யாருடன் கூட்டணி என்று எங்களிடம் கேட்காதீர்கள்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க:ஈபிஎஸ் மீதான அவதூறு வழக்கு; பழைய சட்டப்படி விசாரிக்க தயாநிதி மாறன் தரப்பு வாதம்!

அம்பேத்கர் - புத்தக வெளியீட்டு விழா: டிசம்பர் 6ஆம் தேதி சென்னையில் நடைபெறும் அம்பேத்கர் புத்தக வௌியீட்டு விழாவில் பங்கேற்க ஓராண்டுக்கு முன்பு முடிவு செய்யப்பட்டது. ஏப்ரல் 14 அம்பேத்கர் பிறந்த நாளில் புத்தகம் வெளியிட திட்டமிட்டுள்ளது. ராகுல் காந்தியையும் அழைப்பதாக திட்டமிட்டு இருந்தனர். 40 பேருடைய கட்டுரையின் தொகுப்புகள் தான் எல்லோருக்கும் அம்பேத்கர் என்ற தலைப்பு உள்ளது.

தவெக மாநாட்டிற்கு முன் விஜய்க்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. தற்போது இந்த நிகழ்ச்சியில் விஜய் பங்கேற்கும் பட்சத்தில், அரசியல் சூழலை கருத்தில் கொண்டு நிர்வாகிகள் உடன் பேசி நான் பங்கேற்பது தொடர்பாக முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

திராவிடம்: திராவிடம் என்பது கருத்தியல் நிலப்பரப்பை குறிப்பது அல்ல. அது ஒற்றை மொழி அல்ல, தேசிய இனம் என்று சொல்ல முடியாது. திராவிடம் என்பது கருத்துகள், சாதியத்திற்கு எதிராக பேசிய அரசியல். பெரியாருக்கு முன்னதாகவே இந்த தமிழ் மண்ணில் திராவிடம் குறித்து பேசப்பட்டுள்ளது. சைவ எழுச்சி எழுந்த போது, ஆரிய எதிர்ப்பு உண்டான போது திராவிடர் என்று சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. திராவிடம் கருத்தியல் இல்லை என்றால், சனாதனம் நம்மை விழுங்கி இருக்கும். இந்தி தமிழை விழுங்கி இருக்கும். தமிழர் இனம் இருக்கிறோம் என்றால் பாதுகாப்பு காரணம் திராவிட கருத்தியல் தான்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details