தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கிளர்ச்சில் வாட்டர் பாட்டில் மாட்டியதால் வேன் கவிழ்ந்து விபத்து; 15 பேர் படுகாயம்! - திருவாரூர் அரசு மருத்துவமனை

Tiruvarur Van accident: திருமண நிச்சயதார்த்தத்துக்குச் சென்ற வேன் கிளர்ச்சில் வாட்டர் பாட்டில் மாட்டியதால், வேன் சாலை ஓர வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் படுகாயமடைந்தனர்.

கிளர்ச்சில் வாட்டர் பாட்டில் மாட்டியதால் வேன் சாலை ஓரத்தில் கவிழ்ந்து விபத்து
கிளர்ச்சில் வாட்டர் பாட்டில் மாட்டியதால் வேன் சாலை ஓரத்தில் கவிழ்ந்து விபத்து

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 1, 2024, 9:50 PM IST

திருவாரூர்: மன்னார்குடி பகுதியைச் சேர்ந்தவர் சாமி செல்வம். இவர் வேன் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், மன்னார்குடி அருகே திருவண்டுரை பகுதியைச் சேர்ந்த நேரு என்பவர், சாமி செல்வத்தின் வேனில், தனது உறவினரின் திருமண நிச்சயதார்த்தத்தில் பங்கேற்க 21 பேரை அழைத்துக் கொண்டு, மன்னார்குடியில் இருந்து மயிலாடுதுறை நோக்கி சென்றுள்ளார்.

அப்போது, நன்னிலம் அருகே ஆண்டிப்பந்தல் என்ற பகுதியைக் கடக்கும்போது, கிளர்ச்சில் வாட்டர் பாட்டில் சிக்கிக் கொண்டதால், திடீரென வேன் நிலை தடுமாறி, சாலை ஓரத்தில் உள்ள வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணித்த 10க்கும் மேற்பட்டோருக்கு படுகாயம் ஏற்பட்டது. இதனையடுத்து, அப்பகுதியினர் காயமடைந்தவர்களை மீட்டு, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு விபத்தில் காயமடைந்த ரவி (60), லதா (50), சத்யா (35) பேபி (55) உள்ளிட்ட 15 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். திருமண நிச்சயதார்த்தத்துக்கு வந்த வேன் விபத்துக்குள்ளானதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க:கணவர் உயிருடன் இருக்கும்போதே இறப்புச் சான்றிதழ் பெற்ற மனைவி.. திருவாரூர் எஸ்பி அலுவலகத்தில் கணவர் புகார்!

ABOUT THE AUTHOR

...view details