தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் வைகோ! - Vaiko Discharge

Vaiko Discharge: மதிமுக பொதுச் செயலாளர் அறுவை சிகிச்சை மேற்கொண்ட நிலையில், இன்று மாலை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

Vaiko
வைகோ (Credits - Durai Vaiko 'X' Page)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 2, 2024, 5:06 PM IST

சென்னை: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ, மதிமுக நிர்வாகி ஒருவரின் இல்ல திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக, கடந்த மே 25ஆம் தேதி சென்னையில் இருந்து நெல்லை சென்றார். இதனையடுத்து, அங்கு நிர்வாகியின் வீட்டில் வைகோ தங்கி இருந்தார்.

அப்போது, வீட்டின் மாடிக்குச் செல்வதற்காக படிக்கட்டில் ஏறிய போது கால் இடறி அவர் கீழே விழுந்துள்ளார். இதில் அவருக்கு வலது தோளில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டது. இதை அடுத்து, அங்கிருந்து நிர்வாகிகள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

இதனையடுத்து, வைகோவின் வயது மற்றும் உடல்நிலை கருதி, அவரை விமானம் மூலம் தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு அழைத்து வந்தனர். பின்னர், வைகோ சென்னை ஆயிரம் விளக்கு கிரீம் சாலையில் இருக்கும் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

அவருக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொண்ட நிலையில், லேசான எலும்பு முறிவு இருப்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர், மருத்துவர்கள் கடந்த மே 27 அன்று மாலை வைகோவின் தோள்பட்டையில் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். இதனையடுத்து, அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவர் நலமுடன் உள்ளதாகவும், தோள்பட்டையில் மூன்று இடங்களில் ஏற்பட்டிருந்த எலும்பு முறிவை சரிசெய்ய டைட்டானியம் பிளேட் வைக்கப்பட்டுள்ளது என அவரது மகனும், மதிமுக முதன்மைச் செயலருமான துரை வைகோ ஏற்கனவே கூறியிருந்தார்.

இந்த நிலையில், ஏழு நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வைகோவின் உடல்நிலை ஓரளவிற்கு சீராக இருப்பதால், இன்று மாலை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

இதையும் படிங்க:'எனக்காக கவலைப்படும் உள்ளங்களே! முழு ஆரோக்கியத்தோடு திரும்புவேன்' - வைகோ வெளியிட்ட வீடியோ

ABOUT THE AUTHOR

...view details