தமிழ்நாடு

tamil nadu

"நெல்லை மாதிரி நடக்கக்கூடாது" - கோவை திமுக கவுன்சிலர்களுக்கு ரகசிய மீட்டிங்.. மேயர் தேர்தல் பரபரப்பு! - Coimbatore mayor election

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 6, 2024, 9:23 AM IST

Coimbatore mayor election: கோவை மாநகராட்சி மேயருக்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், திமுக கவுன்சிலர்களுக்கு முக்கிய அறிவுறுத்தலை வழங்கியுள்ளது அக்கட்சித் தலைமை, நெல்லை மேயர் தேர்தலைத் தொடர்ந்து கோவை மேயர் தேர்தல் முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது.

திமுக கவுன்சிலர்களுக்கு நடந்த ஆலோசனை கூட்டம்
திமுக கவுன்சிலர்களுக்கு நடந்த ஆலோசனை கூட்டம் (Credit - ETV Bharat Tamil Nadu)

கோவை:கோவை மாநகராட்சி மேயர் வேட்பாளராக 29-ஆவது வார்டு கவுன்சிலர் ரங்கநாயகியை திமுக தலைமை நேற்று அறிவித்துள்ளது. முதல் முறையாக மாநகராட்சி கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டு இருக்கும் ரங்கநாயகிக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு இருப்பது கட்சியில் உள்ள சீனியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இன்று காலை மேயர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திமுக கவுன்சிலர்கள் அனைவரும் வின்சென்ட் சாலையில் உள்ள நல்லாயன் திருமண மண்டபத்திற்கு காலை 8 மணிக்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. திமுக தலைமையில் இருந்து உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

காலை 10 மணிக்கு மேயர் தேர்தலுக்கான வேட்பு மனு துவங்க இருக்கும் நிலையில், எட்டு மணிக்கு 73 திமுக கவுன்சிலர்களும் மண்டபத்தில் இருக்க வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. இந்நிலையில் அமைச்சர்கள் கே.என்.நேரு, முத்துச்சாமி ஆகியோர் கோவையில் முகாமிட்டு மீண்டும் திமுக கவுன்சிலர்களிடம் காலை அறிவுரை வழங்க இருக்கின்றனர்.

நெல்லை மாநகராட்சி தேர்தலில் திமுக தலைமை அறிவித்த மேயர் வேட்பாளருக்கு போட்டியாக , வேட்பாளர் களமிறங்கி குறிப்பிடத்தக்க வாக்குகளை பெற்ற நிலையில், அதுபோன்ற நிகழ்வு கோவையில் நடந்து விடக்கூடாது என கூடாது என்பதற்காக வேட்புமனு தாக்கல் செய்யும் இரண்டு மணி நேரத்திற்கு முன்பாக கவுன்சிலர்கள் அனைவரையும் ஓரே இடத்தில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் மேயர் தேர்தலுக்கான பணிகளை கவனிக்க சென்னையில் இருந்து திமுக தலைமை கழகத்தில் இருந்து அன்பகம் கலையை கட்சி தலைமை அனுப்பியுள்ளது. மாநாகராட்சியில் அனுபவம் வாய்ந்த சீனியர்கள் பலர் இருக்கும் நிலையில், முதல்முறை கவுன்சிலரான ரங்கநாயகிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு இருப்பது திமுக கவுன்சிலர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஏழு வாக்குகள் வித்தியாசத்தில் தான் வெற்றி; திமுக தலைமையை அதிர வைத்த நெல்லை மேயர் தேர்தல்!

ABOUT THE AUTHOR

...view details