தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை ஏர் ஷோ: ஐந்து பேர் உயிரிழப்புக்கு தமிழக அரசை குற்றம்சாட்டும் மத்திய அமைச்சர் எல்.முருகன்! - L Murugan - L MURUGAN

விமான சாகச நிகழ்ச்சி குறித்து விமானப்படை அதிகாரிகள் தமிழக அரசிடம் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அதற்கேற்றாற்போல் அரசு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 7, 2024, 2:29 PM IST

திருநெல்வேலி: இந்திய விமானப்படை 92 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதைக் கொண்டாடும் வகையில், நேற்று சென்னை மெரினாவில் விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இதைப் சாகசத்தை காண லட்சக்கணக்கானோர் திரண்டனர். இதில், கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு அனைத்து கட்சிகளும் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் நெல்லை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ள வருகை தந்த தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “சென்னையில் நடந்த விமான சாகச நிகழ்ச்சியைப் பார்க்கச் சென்ற ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். இது மிகவும் வருந்தத்தக்கச் சம்பவம்.

தமிழ்நாடு அரசு மீது தாக்கு:இந்த நிகழ்ச்சி குறித்து விமானப்படை அதிகாரிகள் தமிழக அரசிடம் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அதற்கேற்றாற்போல் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டது. சமாளிக்க முடியாத கூட்டத்தைத் தவிர்த்து இருக்கலாம் என்ற கனிமொழி எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். தமிழக அரசால் முடியவில்லை என்ற உண்மையை அவர் கூறியுள்ளார்.அதை வரவேற்கிறேன்” என்றார்.

மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பேட்டி (Credits - ETV Bharat Tamilnadu)

போதைப்பொருள்கள்:ஒவ்வொரு பள்ளிகளிலும் போதைப் பொருள்கள் புழக்கம் அதிகரிக்கிறது. இந்த சம்பவம் சமூக ஆர்வலர்கள், பெற்றோர்களிடையே கவலையாக உள்ளது. திமுகவை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் ரூ. 3000 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க:விமான சாகச நிகழ்ச்சி: ஐந்து பேர் இறப்புக்கு என்ன காரணம்? - அமைச்சர் மா சுப்பிரமணியன் விளக்கம்!

கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி காஷ்மீர், ஹரியானாவில் மீண்டும் ஆட்சி அமைப்போம். காஷ்மீரில் மக்கள் சுதந்திரமாக நடமாடுகிறார்கள். அங்கு சுதந்திரமாக வாக்களித்துள்ளனர். வால்மீகி என்ற ஒரு பிரிவை சேர்ந்த மக்கள் முதன்முறையாக 70 ஆண்டுக்கு பிறகு வாக்களித்துள்ளனர். அந்த பகுதியில் தீவிரவாதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

வெளிநாடு சென்று உரிய முதலீடுகளைக் கொண்டு வராததால் முதலமைச்சரும் திருமாவளவனும் சேர்ந்து இந்த நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர்.ச்போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரையும் கைது செய்து, அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக போலீஸ் வேகமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என ஆளுநர் தன்னுடைய ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details